‘ஏடிஎம் மை உடைத்து ..பணமெடுக்க நினைத்து…’பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் மை பஞ்சராக்கிய வாலிபர் ..

‘ஏடிஎம் மை உடைத்து ..பணமெடுக்க நினைத்து…’பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் மை பஞ்சராக்கிய வாலிபர் ..

செலவுக்கு பணமில்லாத வாலிபர் அங்கிருக்கும் ஒரு வங்கியின் ATMஐ உடைத்து விட்டு சென்றது, அந்த பகுதி வங்கி அதிகாரிகளிடையே அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது
உ.பி .யின் நாக்பூரில் ஷாம் நகரில் வசிக்கும் நிகிலேஷ் என்ற 30 வயது வாலிபர் , இந்த ஊரடங்கு நேரத்தில் வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வந்தார் .இதனால் என்ன செய்வதென்று யோசித்தார் .தனக்கு தெரிந்த நண்பர்கள் ,உறவினர்கள் அனைவரிடமும் கடன் கேட்டார் .யாரும் தரவில்லை ,இதனால் என்ன செய்வதென்று ஞாயிற்று கிழமையன்று நள்ளிரவில் சாலையில் நடந்து வரும்போது, அங்கிருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் மை கவனித்தார்
உடனே அவரின் மூலையில் ஒரு ஐடியா உதயமானது .உடனே அந்த வங்கியின் ATM க்குள் புகுந்தார் .அப்போது அவரிடமிருந்த ஒரு இரும்பு பொருளை கொண்டு அந்த ATMமை உடைத்தார் .

‘ஏடிஎம் மை உடைத்து ..பணமெடுக்க நினைத்து…’பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் மை பஞ்சராக்கிய வாலிபர் ..

அப்படி அவர் உடைத்துக்கொண்டிருந்த போது யாரோ வரும் சத்தம் கேட்டதும் அப்படியே விட்டு விட்டு ஓடிவிட்டார் .வந்தது வேறு யாருமில்லை ,அந்த ATMன் துப்புரவு தொழிலாளிதான் ,அவர் அதை சுத்த படுத்துவதற்குத்தான் வந்தார் .அப்படி வந்த போது இவர் உடைத்து வைத்திருக்கும் ATM மெஷினை கண்டு அதிர்ச்சியுற்று வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார் .

‘ஏடிஎம் மை உடைத்து ..பணமெடுக்க நினைத்து…’பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் மை பஞ்சராக்கிய வாலிபர் ..
விரைந்து வந்த வங்கி அதிகாரிகள் உடைந்திருக்கும் ATM மெஷினை கண்டு போலீசில் புகார் கொடுத்தனர் .விரைந்து வந்த போலீசார் சிசிடிவி கேமராவில் பதிந்திருக்கும் நிகிலேஷின் உருவத்தை கண்டு ,எளிதில் அவரை வீட்டில் கைது செய்தனர் .