நடந்து போக முடியல கால் வலிக்குது! சொந்த ஊர் செல்ல அரசுப்பேருந்தை திருடிய இளைஞர்!!

சொந்த ஊர் திரும்ப பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தை இளைஞர் ஒருவர் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு அருகே விஜயபுரத்தைச் சேர்ந்தவர் முஜாமி கான், இவர் கடந்த ஆந்திரமாநிலம் அனந்தப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஊர் திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்ட அவர், நடந்தே பெங்களூரு செல்ல முடிவெடுத்துள்ளார். தர்மவரம் வரை நடந்து வந்த முஜாமிக்கு, கால்வலி ஏறட்டதால் மதுவாங்கி குடித்துள்ளார்.
அதன்பின் அப்பகுதியிலிருந்த பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்தை பார்த்த முஜாமி, அதை எடுத்துக்கொண்டு ஊருக்கு சென்றுவிடலாம் என முடிவெடுத்திருக்கிறார்.

மது போதையிலிருந்த முஜாமி, பணிமனையிலிருந்த பேருந்தை திருடிக்கொண்டு சென்றுள்ளார். இதையறிந்த தர்மபுரம் பணிமனை அதிகாரிகள் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட சிக்கப்பள்ளி காவல்துறையினர், அனந்தபுரத்தில் செயல்பட்டுவரும் ஒரு கார் தொழிற்சாலைக்கு அருகில் பேருந்தை ஓட்டிச்சென்ற முஜாமிகானை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அரசுப்பேருந்தை எடுத்துக்கொண்டு சென்றால் காவல்துறையினர் பிடிக்க மாட்டார்கள் என எண்ணியே அதனை திருடியதாக முஜாமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

Most Popular

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதில் அதிகமாக தமிழகமும், மகாராஷ்டிராவுமே அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. தமிழகத்தில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து...

வாழ்த்து சொல்வதற்காகவா டெல்லி சென்றார் கு.க.செல்வம்?

தலைமை மீதிருந்த அதிருப்தியினால் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் டெல்லி்யில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில், தான் பாஜகவில் இணையவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் செல்வம். பின்னர் எதற்காக...

சென்னையில் ஒரு லட்சத்து 4,027 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை நெல் சாகுபடியில் சாதனை படைத்த தமிழக அரசு!

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருப்பது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனையாக கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த...