“நூறு பெண்களின் தூக்கத்தை கெடுத்த வாலிபர்” -பலான படமாக்கி நடந்த பயங்கரம்.

 

“நூறு பெண்களின் தூக்கத்தை கெடுத்த வாலிபர்” -பலான படமாக்கி நடந்த பயங்கரம்.

சோசியல் மீடியாவில் பல பெண்களின் போட்டோக்களை நிர்வாணமாக மார்பிங் செய்து அவர்களை பிளாக்மெயில் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தார்கள் .


உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் சுமித் ஜா என்ற 26 வயதான வாலிபர் சோசியல் மீடியாவில் பல பெண்களின் பெயரில் போலியான கணக்கை ஆரம்பிப்பார் .பின்னர் அவர்களின் போட்டோக்களை அவர்களின் ஒரிஜினல் அக்கௌன்ட்டிலிருந்து எடுப்பார் .பின்னர் அந்த போட்டோக்களை பல பலான பெண்களின் நிர்வாண போட்டோக்களின் தலையை வெட்டி விட்டு இவர்களின் தலையை ஒட்டி மார்பிங் செய்வார் .
பின்னர் அந்த மார்பிங் போட்டோக்களை சம்பந்தப்பட் பெண்களுக்கு ஊடகத்தில் அனுப்புவார் .பின்னர் அந்த போட்டோக்களை மேலும் பலருக்கு அனுப்பி அசிங்கப்படுத்துவதாகக் கூறி அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவார் .அப்படி அவர் நூறுக்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டியுள்ளார் .இவரிடம் சமீபத்தில் ஒரு பெண் வங்கி மேலாளரின் போட்டோ சிக்கியுள்ளது .அவரின் அந்த போட்டோவையும் அவர் இப்படி மார்பிங் செய்து அவருக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளார் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் மேனேஜர் அங்குள்ள காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தார் .போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் அவரின் போன் நம்பர் மற்றும் ஊடக கணக்கை ட்ரேஸ் செய்தார்கள். அதன் பிறகு அவரை கைது செய்தார்கள் .அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் ஏற்கனவே 2018ம் ஆண்டு இதே போல ரஒரு வழக்கில் சத்தீஸ்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்ற விவரம் அறிந்து அதிர்ச்சியடைந்தார்கள் .மேற்கொண்டு அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் .

“நூறு பெண்களின் தூக்கத்தை கெடுத்த வாலிபர்” -பலான படமாக்கி நடந்த பயங்கரம்.