வீட்டை காலி செய்ய சொன்ன ஓனர் -சுடுகாட்டில் தங்கிய பெண் -கொரானா பயத்தில் நடந்த கொடுமை

 

வீட்டை காலி செய்ய சொன்ன ஓனர் -சுடுகாட்டில் தங்கிய பெண் -கொரானா பயத்தில் நடந்த கொடுமை


கொரானா தாக்கிவிடும் என்ற பயத்தில் ஒரு வீட்டில் குடியிருந்தவர்களை காலி செய்ய சொன்னதால் அவர்கள் சுடுகாட்டில் தங்கிய சம்பவம் நடந்துள்ளது .

வீட்டை காலி செய்ய சொன்ன ஓனர் -சுடுகாட்டில் தங்கிய பெண் -கொரானா பயத்தில் நடந்த கொடுமை


ஆந்திராவில் மேற்கு கோதாவரியின் அகிவேடு கிராமத்தில் வசிக்கும் 80 வயதான பெண் யெகுலா வீரம்மா தன்னுடைய இரண்டு மகன்களோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் போனது .அதனால் அவர் அங்குள்ள அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார் .அதன் பிறகு அவர் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தார் .ஆனால் அவர் வசிக்கும் வீடு வாடகை வீடு என்பதால் அவரின் வீட்டு ஓனர் பீதலா ராஜு அவரை வீட்டில் சேர்க்க மறுத்து விட்டார் .இதற்கு அந்த பெண்ணுக்கு கொரானா தாக்கியிருக்குமோ என்ற பயம் அந்த ஓனருக்கு இருந்தது .அதனால் அந்த கொரானா தனக்கும் வந்து விடும் என்று பயந்த அந்த ஓனர் அவரையும் அவரின் மகன்களையும் வீட்டை விட்டு வெளியேற சொன்னார் .
அதனால் அந்த பெண் ஏப்ரல் 19ம் தேதி தன்னுடைய இரண்டு மகன்களோடு அந்த வீட்டை விட்டு அந்த இரவில் வெளியேறி அங்குள்ள ஒரு சுடுகாட்டில் சென்று தங்கினார்.அதை கேள்விப்பட்ட பொதுமக்களில் சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர் .மேற்கு கோதாவரி எஸ்.பி. நாராயண் நயா இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், உடனே நடவடிக்கை எடுக்குமாறு அகிவேடு துணை ஆய்வாளர் வீரபத்ராவிடம் கேட்டுக்கொண்டார் . ராவ் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த குடும்பத்தினரை அவரின் வீட்டிற்கு திருப்பி அனுப்பினார். அந்த பெண்ணை வீட்டிற்குள் நுழைய அந்த வீட்டு ஓனர் மறுப்பு தெரிவித்தால் , அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராவ் கூறினார்.

வீட்டை காலி செய்ய சொன்ன ஓனர் -சுடுகாட்டில் தங்கிய பெண் -கொரானா பயத்தில் நடந்த கொடுமை