காதலித்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

 

காதலித்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர், காதலித்து வந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வெளியே தெரிய வந்ததும் அந்த நபர் புளியமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.’

திருவண்ணாமலையில் உள்ள அழிவிடைதாங்கி பகுதியில் உள்ள ஒரு மரத்தில் உடல் தொங்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இறந்தவர் நபர் பி தாமஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாமஸ் ஒரு தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். தாமஸ் தனது வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெருங்கட்டூர் கிராமத்தின் ஒரு டீக்கடையில் வழக்கமான வாடிக்கையாளராக சென்று வந்துள்ளார். அப்போது அந்த டீக்கடை உரிமையாளரின் மகளை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். பின் அந்த சிறுமியிடம் கல்யாணம் ஆசை வார்த்தைகள் கூறி அவ்வப்போது வெளியே கூட்டிச் சென்றுள்ளார். அப்போது சிறுமியை மறைமுகமான இடங்களுக்கு அழைத்துச் செல்வதோடு புகைப்படங்களும் எடுத்து வந்திருகிறார்.

காதலித்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

டீக்கடை உரிமையாளரும் அவரது குடும்பத்தினரும் இது பற்றி அறிந்ததும், அசிறுமியை முஎச்சரித்துள்ளனர். இதனால் அந்த சிறுமி ஆம்புலன்ஸ் டிரைவருடன் உள்ள உறவை முறித்துக் கொண்டுள்ளார். ஜூன் 12 ம் தேதி, டிரைவர் சிறுமியை தொடர்பு கொண்டு, அவரை ஒரு மறைமுகமான இடத்தில் சந்திக்குமாறு கூறியுள்ளார். அதற்கு சிறுமி மறுத்துள்ளதால் அவர்களின் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடப் போவதாக டிரைவர் மிரட்டியுள்ளார்.

அதனால் அந்தச் சிறுமி தாமஸைச் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது தாமஸ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது, ஆனால் சிறுமி அங்கிருந்து தப்பியுள்ளார். இதையடுத்து டீக்கடை உரிமையாளர் தாமஸ் குறித்து போலீசில் புகாரளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் குற்றவாளியை போலீஸ் தேடிய போது அவர் ஒரு மரத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். டீக்கடை உரிமையாளரின் குடும்பம் இதற்கு காரணம் என்றும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் டிரைவரின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.