ஆஸ்திரேலியாவில் 3 மீட்டர் நீளம் கொண்ட சுறா கடித்ததால் ஒருவர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவின் பிரபல கடற்கரையில் மூன்று மீட்டர் நீளம் கொண்ட சுறாவால் தாக்கப்பட்டதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் பிரபல கடற்கரையில் மூன்று மீட்டர் நீளம் கொண்ட சுறாவால் தாக்கப்பட்டதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆஸ்திரேலியாவில் இன்று காலை பிரிஸ்பேனுக்கு தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிங்ஸ்கிளிஃப் என்ற இடத்தில் குயின்ஸ்லாந்து மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது கொண்ட ஒருவர் சர்ஃபிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மீட்டர் நீளம் கொண்ட சுறா அவரது காலை கடித்தது. சுறாவை எதிர்த்து அவர் போராடினார். அங்கிருந்த பல போர்டு ரைடர்ஸ் அவரை கரைக்கு மீட்டு கொண்டு வந்தனர். அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

shark

ஆனால் துரதிஷ்டவசமாக அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு சுறா தாக்குதலால் நடந்த மூன்றாவது இறப்பு இதுவாகும். உலகில் அதிகளவில் மனிதர்களை சுறா தாக்குவது ஆஸ்திரேலியா தான் முதலிடத்தில் உள்ளது. ஆனால் சுறா தாக்குதலால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன. சிட்னியின் தரோங்கா மிருகக்காட்சிசாலையின் தகவல்கள்படி, கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 27 சுறா தாக்குதல்கள் நடந்தன. ஆனால் சுறாவால் யாரும் இறக்கவில்லை.

Most Popular

சாதித்த இ.பி.எஸ் அரசு: 3 ஆண்டுகளாக தேசிய விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக தமிழக பொருளாதார வளர்ச்சி விகிதம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது என்பதை காட்டும் வகையில் உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள்...

மூணாறு நிலச்சரிவில் இதுவரை 8 பேர் பலி !

தென் மேற்கு பருவமழையால் கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. அதன்படி கேரள மாநிலம் இடுக்கி...

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு பல்வேறு நிதியுதவியும் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறது. சமீபத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித்தொகை...

வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன் தற்கொலை

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன்(54) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்தமாதம் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவர், வாழ பிடிக்கல்லை என்று கடிதம்...