“ஏண்டா பம்ப் வச்சி அந்த இடத்துல காத்தடிக்கிறே” -விளையாட்டு வினையானதால் போன உயிர்.

 

“ஏண்டா பம்ப் வச்சி அந்த இடத்துல காத்தடிக்கிறே” -விளையாட்டு வினையானதால் போன உயிர்.


ஒரு நண்பர் காற்றடிக்கும் பம்ப் கொண்டு தன்னுடைய நண்பரின் ஆசன வாயில் காற்றடித்ததால் அவர் மூச்சு திணறி இறந்தார்

“ஏண்டா பம்ப் வச்சி அந்த இடத்துல காத்தடிக்கிறே” -விளையாட்டு வினையானதால் போன உயிர்.


மத்திய பிரதேசத்தின் காட்னி மாவட்டத்தில் மாதவ் நகர் பகுதியில் சுக்ரன் யாதவ் என்பவரும் அவரின் நண்பர் வினோத் தாக்கூர் என்பவரும் அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றினார்கள் .அந்த இரு நண்பர்களும் அந்த தொழிற்சாலையில் உணவு இடைவேளையின் போது விளையாடிக்கொண்டே இருப்பார்கள் .மேலும் ஒருவருக்கொருருவர் அடித்து கொண்டும் ,பிடித்துக்கொண்டும் வேலை செய்வார்கள் .
இந்நிலையில் கடந்த வாரம் சுக்ரன் அந்த தொழிற்சாலையில் துணி மாற்றிக்கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த அவரின் நண்பர் வினோத் அங்கிருந்த காற்றடிக்கும் பம்பை எடுத்து அவரின் ஆசன வாயில் வைத்து விளையாட்டுக்காக பம்ப் செய்து காற்றடித்தார் .அப்போது அந்த நண்பரின் செய்கையால் சுக்ரன் வலியால் துடித்தார் .ஆனால் அவர் சும்மா விளையாட்டுக்கு அழுவது போல நடிக்கிறார் என்று அவர் தவறாக நினைத்தார் .அதனால் அவர் பம்பால் காற்றடிப்பதை நிறுத்தவில்லை .பிறகு அவரின் செய்கையால் அந்த நண்பர் அந்த இடத்திலேயே வலியால் துடித்து இறந்தார் .
பிறகு இந்த நபரின் இறப்பு விஷயம் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது .தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள் ,பின்னர் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .இது பற்றி அங்கிருந்தவர்கள் கூறுகையில் , அவருக்கு அதிகப்படியான காற்று ஆசன வாய் வழியாக செலுத்தப்பட்டதால் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்று கூறினார்கள் .அதனால் அவரின் நண்பரை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவரின் நண்பர் வினோத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிரார்கள் .

“ஏண்டா பம்ப் வச்சி அந்த இடத்துல காத்தடிக்கிறே” -விளையாட்டு வினையானதால் போன உயிர்.