கோவை அருகே காட்டு யானைத் தாக்கி தொழிலாளி மரணம்!

 

கோவை அருகே காட்டு யானைத் தாக்கி தொழிலாளி மரணம்!

கோவை அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக காட்டு விலங்குகள் உணவுத்தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது அதிகமாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரனூர் மலைப்பகுதிக்கு பசுவை தேடிச்சென்ற தொழிலாளி சிக்கண்ணா என்பவர் காட்டு யானைத் தாக்கியதில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஆப்பேரியில் நடந்து சென்று கொண்டிருந்த முனுசாமி என்பவரை ஒற்றை யானை தாக்கி கொன்றுள்ளது.

கோவை அருகே காட்டு யானைத் தாக்கி தொழிலாளி மரணம்!

இவ்வாறு காட்டு யானைகளின் அட்டூழியம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில், ஓசூர் அருகே 3 நாட்களில் 3 பேர் ஒற்றை யானை தாக்கி உயிரிழந்தனர்.இந்த நிலையில், கோவையில் யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. கோவை, கணுவாய் பகுதியில் நாகராஜ் என்னும் தொழிலாளி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கே வந்த காட்டு யானை அவரை தாக்கி தூக்கி வீசியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த நாகராஜ் அங்கேயே உயிரிழந்துள்ளார்.

கோவை அருகே காட்டு யானைத் தாக்கி தொழிலாளி மரணம்!

தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கணுவாய் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வாயில் காயத்துடன் ஒரு யானை சுற்றித் திரிவதாகவும் அந்த யானை தான் நாகராஜை கொன்றிருக்கும் எனவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.