சிறுமியிடம் அத்துமீறியதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் உயிரிழப்பு!

 

சிறுமியிடம் அத்துமீறியதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் உயிரிழப்பு!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன் போக்சோ சட்டத்தில் பரமத்தி வேலூர் போலீசார் நேற்று கைது செய்து மருத்துவமனை சிகிச்சையின்போது இறந்து போனார்.

சிறுமியிடம் அத்துமீறியதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் உயிரிழப்பு!

கடந்த மாதம் ஒன்பதாம் தேதி மணிகண்டன் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ய முயற்சித்துள்ளான். அப்போது அந்த சிறுமி கூச்சலிட்டு காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மணிகண்டனை கட்டையால் கடுமையாக தாக்கி மணிகண்டனை கயிற்றை கொண்டு கட்டி வைத்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த பரமத்திவேலூர் காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார், ரத்தம் சொட்ட சொட்ட கட்டப்பட்டிருந்த மணிகண்டனை எச்சரித்து சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து சிறுமியின் தாயார் கடந்த மாதம் 17ஆம் தேதி மணிகண்டன் தனது மகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளான் என பரமத்தி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் மணிகண்டன் தேடி வந்தனர். அப்போது மணிகண்டன் பாண்டமங்கலத்தில் உள்ள அவரது வீட்டில் பதுங்கி இருப்பதாக நேற்று பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிந்தது. தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டில் பதுங்கி இருந்த மணிகண்டனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் மணிகண்டன் பாத்ரூம் வருகிறது என்று கூறிவிட்டு காவல் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். கழிவறைக்குச் சென்று வெகுநேரமாகியும் வெளியே வராததால் போலீசார் பாத்ரூம் உள்ளே சென்று பார்த்தனர்.

சிறுமியிடம் அத்துமீறியதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் உயிரிழப்பு!

அப்போது பாத்ரூமில் மயங்கிய நிலையில் படுத்து இருந்த மணிகண்டனை ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் உடல் நிலை மோசமாக உள்ளதாக கூறி மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் மணிகண்டன் உயிரிழந்ததாக மருத்துவர் பரமத்திவேலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மணிகண்டன் இறப்பில் சந்தேகம் இருப்பதால் நீதிபதி முன்பு உடற்கூராய்வு செய்யப்பட்டது.