“அமிதாப் வருவார் ,ஒரு கோடி தருவார்” -வாட்ஸ் அப் மெஸேஜால் டேமேஜ் ஆன இரு பெண்கள்.

 

“அமிதாப் வருவார் ,ஒரு கோடி தருவார்” -வாட்ஸ் அப் மெஸேஜால் டேமேஜ் ஆன இரு பெண்கள்.

கோடிக்கணக்கான ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக வாட்ஸ் அப்பில் வந்த மெஸ்ஸேஜை நம்பிய இருவர் , ஐந்து லட்சம் ஏமாந்த கதை பலருக்கு ஒரு பாடமாக இருக்கும்

“அமிதாப் வருவார் ,ஒரு கோடி தருவார்” -வாட்ஸ் அப் மெஸேஜால் டேமேஜ் ஆன இரு பெண்கள்.

மகாராஷ்டிரா மாநிலம்  ரத்னகிரியில் வசிக்கும் கைசர்பானு காசி (43) மற்றும் ரெஹானா பட்கர் (35)ஆகிய  இருவரின்  வாட்ஸ்அப்பிற்கும்  நவம்பர் 11 அன்று ஒரு செய்தி வந்தது .அதில் கோன் பனேகா குரோர்பதி தொகுப்பாளர் அமிதாப் பச்சன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி ஆகியோரின் முகங்களுடன் உள்ள ஒரு  கடிதம் வந்தது .அதில் அவர்களுக்கு ஒரு கோடி பரிசு விழுந்துள்ளது என்றும் அந்த பரிசை அவசரமாக வந்து பெற்றுக்கொள்ள அவர்களை வலியுறுத்தபட்டிருந்தது

அந்த கடிதத்தை அனுப்பியவர் மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையின் மேலாளர் என்றும், லாட்டரி பரிசுத் தொகையை அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்ற வேண்டுமென்றும்  செய்தி இருந்தது. அடுத்த நாள், இரு பெண்களும் தங்கள் பரிசைக் கேட்டு  குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டனர்.

அப்போது அந்த போனில் பேசியவர் அந்த பரிசு தொகையை பெற “செயலாக்க கட்டணம்”, “நாணய மாற்றம்”, “வங்கி கணக்கு மாற்றம்”, “ஜிஎஸ்டி” மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவின் விசாரணையைத் தவிர்ப்பதற்கான  கமிஷன் ஆகியவற்றிற்காக  மொத்தம் ரூ .5 லட்சம் கேட்டார் .அதை உண்மையென்று நம்பிய அவர்கள் அவர் கேட்ட அந்த 5 லட்சத்தை கொடுத்தார்கள்  .

அதன் பிறகு அந்த பரிசை பெற மேலும்  ரூ .45,000 கூடுதலாக செலுத்துமாறு மேலாளர் கேட்டபோது, ​​அவர் ஏமாற்றப்பட்டதை பட்கர் உணர்ந்தார்.அதனால் அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள் .

“அமிதாப் வருவார் ,ஒரு கோடி தருவார்” -வாட்ஸ் அப் மெஸேஜால் டேமேஜ் ஆன இரு பெண்கள்.