“கொரானாவை கொல்லும் ,வைரஸை வெல்லும்”-போலி மருந்து விற்ற போலி மருத்துவர் கைது

 

“கொரானாவை கொல்லும் ,வைரஸை வெல்லும்”-போலி மருந்து விற்ற போலி மருத்துவர் கைது

ஒரு போலி மருத்துவர் கொரானாவுக்கு மருந்து கொடுப்பதாக ஏமாற்றி மக்களிடம் பணம் பறித்துள்ளதை கேள்விப்பட்ட போலீசார் அவரை கைது செய்துள்ளார்கள்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் கத்ராஜ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே டோட்கர் சஞ்சீவானி நிசர்கோப்சார் கேந்திரா என்ற பெயரில் ஒரு மருத்துவர் கொராணாவிற்கு மருந்து கொடுப்பதாக கேள்விப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருப்பதாக அந்த பகுதியின் சுகாதார அதிகாரிக்கு தகவல் கிடைத்தது .
அதனால் சுகாதார அதிகாரி டாக்டர் தீபக் பக்கலே இந்த போலி மருந்து பற்றியும் ,போலியான மருத்துவர் பற்றியும் விசாரணை நடத்தியபோது அந்த மருத்துவர் எந்த மருத்துவ அங்கீகாரமும் பெறாமல் இப்படி போலியாக சமூக ஊடகங்களில் கொரானாவுக்கு மருந்து கொடுப்பதாக விளம்பரம் செய்வதை கண்டறிந்தார் .அதனால் சுகாதார துறை ஊழியர்களை அவரின் க்ளினிக்கிற்கு அனுப்பி விசாரணை நடத்தினார் .அப்போது அங்கு பல நோயாயாளிகள் அவரிடம் கொரானாவுக்கு மருந்து வாங்க காத்திருப்பதை கண்டறிந்து ,அந்த மருத்துவர் மீது போலீசில் புகாரளிக்கப்ட்டது .
போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் சுகாதார அதிகாரி டாக்டர் தீபக் பக்கலே கூறியது உண்மையென்று கண்டறிந்தார்கள் .அதனால் அந்த போலி மருத்துவரை கைது செய்த போலீசார் அவரின் க்ளினிக்கையும் பூட்டி சீல் வைத்தார்கள் .அப்போது அங்கு கொரானாவுக்கு மருந்து வாங்கவும் ,நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கு மருந்து வாங்கவும் காத்துகொன்டிருந்த நோயாளிகள் அதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள்

“கொரானாவை கொல்லும் ,வைரஸை வெல்லும்”-போலி மருந்து விற்ற போலி மருத்துவர் கைது