“ரூ.1,500க்கு இ-பாஸ்”…வேலூரில் முறைக்கேடாக பாஸ் வாங்கித் தருவதாக கூறியவர் கைது!

 

“ரூ.1,500க்கு இ-பாஸ்”…வேலூரில் முறைக்கேடாக பாஸ் வாங்கித் தருவதாக கூறியவர் கைது!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், பொதுப்போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. அதே போல வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கும் வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கும் இ பாஸ் நடைமுறை தொடருகிறது. அந்த இ பாஸ் அவசரத்தேவை உள்ளிட்ட 6 காரணங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே பல போலியாக இபாஸ் தயாரித்து கொடுப்பதும், பாஸ் இல்லாமல் செல்வதும் அதிகரித்து வருகிறது.

“ரூ.1,500க்கு இ-பாஸ்”…வேலூரில் முறைக்கேடாக பாஸ் வாங்கித் தருவதாக கூறியவர் கைது!

இன்று காலை வேலூரில் ரூ.3,000 லஞ்சம் பெற்றுக்கொண்டு இடைத்தரகர்கள் இ-பாஸ் வாங்கித் தருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து வேலூர் ஆட்சியர், “இ-பாஸ் பெற்றுத்தருவதாக கூறும் எந்த நபரையும் பொதுமக்கள் நம்பவேண்டாம்” கூறினார். இந்த நிலையில் ரூ.1,500க்கு இ பாஸ் வாங்கி தருவதாக கூறிய வேலூரை சேர்ந்த ஜெகதீசன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, போலி இ பாஸ் தயாரிக்கும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.