கிசான் திட்டத்தில் மோசடி: சேலத்தில் மேலும் ஒருவர் கைது!

 

கிசான் திட்டத்தில் மோசடி: சேலத்தில் மேலும் ஒருவர் கைது!

மத்திய அரசின் கிசான் திட்டத்தில் மோசடி செய்த சேலத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில், விவசாயிகளுக்கு கடன் வழங்கும் கிசான் திட்டத்தில் மோசடி நடந்திருப்பது அம்பலமானது. இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அரசு உத்தரவிட்டதன் பேரில், அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

கிசான் திட்டத்தில் மோசடி: சேலத்தில் மேலும் ஒருவர் கைது!

இதனையடுத்து மோசடியில் ஈடுபட்டவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நேற்று பேசிய வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங், இதுவரை 80 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் ரூ.32 கோடி பணம் திரும்பப்பெற பட்டுள்ளதாகவும் மொத்தமாக ரூ.110 கோடி மோசடி நடந்திருப்பதாகவும் கூறினார். இதனிடையே கிசான் மோசடியில் ஈடுபட்டவர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட, சேலம் மாவட்டம் நங்கவள்ளி என்னும் பகுதியில் கணினி மையம் நடத்தி வந்த கலையரசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அம்மாவட்டத்தில் கிசான் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.