சில்வர் தட்டுகளில் ரூ.38.64 லட்சம் வெளிநாட்டு கரன்சி… அதிர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள்… கடத்த முயன்றவர் சிக்கினார்

 

சில்வர் தட்டுகளில் ரூ.38.64 லட்சம் வெளிநாட்டு கரன்சி… அதிர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள்… கடத்த முயன்றவர் சிக்கினார்

சென்னையில் இருந்த சிங்கப்பூருக்கு பார்சல் மூலம் கடத்த இருந்த இங்கிலாந்து கரன்சிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு பக்கம் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மறுபக்கம் கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. தமிழகத்தில் போதை பொருள்களின் கடத்தலும், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தங்கத்தையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு கரன்சி நூதன முறையில் கடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கூரியர்களில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்த அனைத்து கூரியர் பார்சல்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த பெரிய பார்சலை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதனை திறந்து பார்த்தபோது அதில் சில்வர் தம்ளர்கள், தட்டுகள் இருந்தன. இந்த தட்டுகள் வழக்கத்துக்கு மாறாக அதிக எடை கொண்டதாக இருந்தது.

தட்டுகளை எரித்து பரிசோதனை செய்ததில் 2 தட்டுகள் ஒன்றன் மீது ஒன்றாக இணைக்கப்பட்டு இருந்தது. சந்தேகத்தின்பேரில் 2 தட்டுகளையும் பிரித்து பார்த்தபோது, தட்டுகளுக்கு இடையே இங்கிலாந்து நாட்டு பவுண்ட் கரன்சிகளை மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். ரூ.38 லட்சத்து 64 ஆயிரம் மதிப்புள்ள 40 ஆயிரம் பவுண்டு கரன்சிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு இங்கிலாந்து கரன்சிகளை நடத்தியது தொடர்பாக சுங்கத்துற அதிகாரிகள் விசாரணை நடத்தியனர். அப்போது, கூரியர் பார்சல் அனுப்பி சென்னையை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான நிலையங்களில் கடத்தல் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.