ஆட்டோவில் கஞ்சா கடத்த முயன்ற ஒருவர் கைது – 28 கிலோ கஞ்சா பறிமுதல்

 

ஆட்டோவில் கஞ்சா கடத்த முயன்ற ஒருவர் கைது – 28 கிலோ கஞ்சா பறிமுதல்

தேனி

கம்பம் பகுதியில் ஆட்டோவில் கடத்தமுயன்ற 28 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக ஒருவரை செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் வாகனத்தில் கஞ்சா கடத்திச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கம்பம் காவல் ஆய்வாளர் சிலைமணி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆட்டோவில் கஞ்சா கடத்த முயன்ற ஒருவர் கைது – 28 கிலோ கஞ்சா பறிமுதல்

அப்போது, கம்பம் தாத்தப்பன்குளம் புறவழிச் சாலையில் வந்த ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனை நடத்தினர். அதில், ஆட்டோவிற்குள் சாக்குமூட்டையில் பதுக்கி கஞ்சாவை கடத்திச்சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து ஆட்டோவில் இருந்து சுமார் 28 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக தாத்தப்பன்குளத்தை சேர்ந்த ஓட்டுநர் வைரமுத்து என்பவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.