பர்கூரில் விவசாய தோட்டத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்த நபர் கைது

 

பர்கூரில் விவசாய தோட்டத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்த நபர் கைது

ஈரோடு

அந்தியூர் அருகே விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்த நபரை போலீசார் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ளது தம்முரெட்டி கிராமம். இங்குள்ள விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு உள்ளதாக, பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பர்கூரில் விவசாய தோட்டத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்த நபர் கைது

அதன்பேரில், தம்முரெட்டி மலைக் கிராமத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சித்திலிங்கம் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டு வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது வீட்டில் நடத்திய சோதனையில், விற்பனை செய்வதற்காக அட்டை பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சித்தலிங்கம் மீது வழக்கு பதிவுசெய்து, கைதுசெய்த பர்கூர் போலீசார் அவரை பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்