நெல்லை அருகே அனுமதியின்றி ஜல்லிகற்கள் ஏற்றிச்சென்ற நபர் கைது!

 

நெல்லை அருகே அனுமதியின்றி ஜல்லிகற்கள் ஏற்றிச்சென்ற நபர் கைது!

நெல்லை

நெல்லை அருகே உரிய அனுமதியின்றி ஜல்லிக்கற்களை ஏற்றி சென்ற நபரை கைதுசெய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் சந்திமறித்த அம்மன் கோயில் அருகே இன்று காலை புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை வட்டாட்சியர் சந்திரஹாசன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஜல்லிக்கற்களை ஏற்றிவந்த டிப்பர் லாரியை மறித்து, ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

நெல்லை அருகே அனுமதியின்றி ஜல்லிகற்கள் ஏற்றிச்சென்ற நபர் கைது!

அப்போது, உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, சுமார் இரண்டரை டன் அளவிலன ஜல்லிக்கற்கள் மற்றும் டிப்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், அவற்றை கடத்திவந்த சங்கர் நகரை சேர்ந்த காசிராஜா என்பவரை பிடித்து, தச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு, காசிராஜன் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.