‘கவர்ன்மண்ட் ஆபீஸர் எனக்கூறி’ பியூட்டி பார்லர் ஓனரிடம் பணம் பறித்தவர் கைது!

 

‘கவர்ன்மண்ட் ஆபீஸர் எனக்கூறி’ பியூட்டி பார்லர் ஓனரிடம் பணம் பறித்தவர் கைது!

கோவை அருகே அரசு அதிகாரி எனக்கூறி அழகு நிலைய உரிமையாளரிடம் பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை சொக்கப்புதூர் பகுதியில் வசித்து வருபவர் மதன் கண்ணன், வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் டீ பில்டர் தயாரிக்கும் கம்பெனியை நடத்தி வந்த நிலையில், கொரோனா காலத்தில் பிசினஸ் தொய்வடைந்துள்ளது. இதனால் இவர், தனது நண்பர் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து பீளமேடு அண்ணாநகர் அருகே இருக்கும் ராம்லட்சுமணன் நகரில் பியூட்டி கேர் என்ற பேரில், பியூட்டி பார்லர் தொழில் தொடங்கியிருக்கிறார்.

‘கவர்ன்மண்ட் ஆபீஸர் எனக்கூறி’ பியூட்டி பார்லர் ஓனரிடம் பணம் பறித்தவர் கைது!

அங்கு பியூட்டி பார்லருக்கு தேவையான எல்லா பொருட்களும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு கடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கடைக்கு தேவையான உபகரணங்கள் எல்லாத்தையும் வாங்கியதோடு, கடை அமைப்பதற்காக கோவை மாநகராட்சியிலும் கோவை தீயணைப்புத்துறையிலும் விண்ணப்பித்துள்ளனர். இந்த அனைத்தையும் வேலுமணி என்பவர் நோட்டமிட்டு வந்துள்ளார்.

‘கவர்ன்மண்ட் ஆபீஸர் எனக்கூறி’ பியூட்டி பார்லர் ஓனரிடம் பணம் பறித்தவர் கைது!

கடந்த மாதம் 22ம் தேதி அழகு நிலையம் சம்பந்தமான துறை அதிகாரி எனக்கூறி கடைக்குள் வந்த அந்த நபர், 30 ஆயிரம் ரூபாய் பணத்தையும் விண்ணப்ப பேப்பரையும் வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். அதன் பிறகு, போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி மிரட்டிய வண்ணமே இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று மீண்டும் வந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் கடுப்பான மதன் கண்ணன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் பேரில், வேலுமணியை போலீசார் கைது செய்துள்ளனர்.