“டைவர்ஸ் ஆன பெண்களை டக்குன்னு மடக்கலாம்” -விஷால் வலையில் வீழ்ந்த பெண்கள்.

 

“டைவர்ஸ் ஆன பெண்களை டக்குன்னு மடக்கலாம்” -விஷால் வலையில் வீழ்ந்த பெண்கள்.

தன்னை ஒரு பிரிட்டிஷ் குடிமகன் என்று பொய் சொல்லி பல பெண்களை ஏமாற்றிய ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளார்கள்

தெற்கு டெல்லியில் உள்ள கோட்லா முபாரக்பூர் ஏரியாவில் விஷால் என்பவர் டைவர்ஸ் மேட்ரிமோனியல் என்ற இணைய தளத்தில் தன்னை ஒரு பிரிட்டிஷ் குடிமகன் என்றும் தாம் ஒரு டைவர்ஸ் ஆன ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கூறி பதிவு செய்தார் .அவர் கூறிய விவரத்தை உண்மையென நம்பிய ஒரு பெண் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை தொடர்பு கொண்டார் .
அப்போது அந்த பெண்ணுடன் பேசிய விஷால் தாம் ஒரு பிரிட்டிஷ் குடிமகனென்றும் தற்போது தமக்கு உடனடியாக கொஞ்சம் பணம் தேவைப்படுகிறதென்றும் ,சில நாள் கழித்து நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறினார் .அதை உண்மை என நம்பிய அந்த பெண் அவர் கேட்ட 4 லட்சம் ரூபாய் பணத்தினை அவரின் அக்கௌண்டுக்கு அனுப்பியுள்ளார் .அதன் பிறகு சில நாட்கள் அந்த பெண்ணுடன் வாட்ஸ் அப் மற்றும் முக புத்தகம் போன்றவற்றில் தொடர்பு கொண்ட அந்த விஷால் சிலநாட்கள கழித்து தன்னுடைய செல்போன் மற்றும் அணைத்து ஊடக கணக்குகளையும் முடக்கிவிட்டு தொடர்பிலிருந்து விலகிவிட்டார் .
இதனால அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவர் மீது போலீசில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தார்கள்.அப்போது போலீசார் அவரை விசாரித்த போது அவர் இது போல பல டைவர்ஸ் ஆன பெண்களை ஏமாற்றியதாக கூறினார் .

“டைவர்ஸ் ஆன பெண்களை டக்குன்னு மடக்கலாம்” -விஷால் வலையில் வீழ்ந்த பெண்கள்.