அண்ணன் மரணம் ! திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அண்ணியுடன் உல்லாசம் ! வேறொரு பெண்ணை மணக்கும்போது நேர்ந்த பரிதாபம் !

உத்தரகாண்ட் மாநிலத்தில் உடல்நலக்குறைவால் அண்ணண் உயிரிழந்த நிலையில், அண்ணியை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக மைத்துனர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வன்பல்புரா காவல் நிலைய பகுதியில் வசிக்கும் பெண் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவர் 2 குழந்தைகளுக்கு தாயான நிலையில் தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். பின்னர் 2019 ஆம் ஆண்டு அந்த பெண்ணை அவரது மைத்துனர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயத்தை அந்த பெண் தனது மாமியாரிடம் தெரிவித்தார்.

பிரச்சனை பெரிதாகவே அண்ணியை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார் அந்த இளைஞர். பின்னர் அடிக்கடி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கிடையில், அந்த இளைஞன் வேறொருவருடன் திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்று தெரியவர இதுகுறித்து பெண் கேட்டபோது மாமியார், மாமனார் மற்றும் மைத்துனர் ஆகியோர் அவரைத் தாக்கி, கடந்த மாதம் மே 20 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியில் துரத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் அந்த இளைஞருக்கு புதன்கிழமை திருமணம் நடைபெற விருந்தது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலிசில் புகார் அளித்தார் பின்னர் அந்த இளைஞர் திருமண நாளில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Most Popular

ராமர் கோயில் பூமி பூஜை ஜனநாயகத்தின் மரணம் என்ற காமெடியன் குணால் கம்ரா.. பதிலடி கொடுத்த டிவிட்டர்வாசிகள்..

பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா. அவர் காமெடியனாக இருந்தாலும் விரும்பதகாத சர்ச்சைகளில் சிக்குவது தற்போது சகஜமாகி வருகிறது. நேற்று அயோத்தியில் நடந்த ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை...

சுஷாந்த் மரண வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு! எனது பொறுப்பை நிறைவேற்றிவிட்டேனா? சுப்பிரமணியன் சுவாமி

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது இந்திய திரைப்பட உலகில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கான...

மகாராஷ்டிரா நிலவரம் தொடர்பாக சரத் பவார் தனது கட்சி தலைவர்களுடன் மட்டும் ஆலோசனை…

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகிளன் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. தற்போது அம்மாநிலம் கொரோனா வைரஸால் கடுமையாக...

அமெரிக்காவிலும் களைகட்டிய ராமர் கோயில் பூமிபூஜை கொண்டாட்டங்கள்!

அயோத்தி ராமர் கோயில் பூமிபூஜை விழாவை அமெரிக்காவிலும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர் அங்குள்ள இந்தியர்கள். அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 200 மத தலைவர்களுக்கு...