kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


50 லட்சம் இன்சூரன்ஸுக்காக, கூலிப்படையை வைத்து தன்னையே கொலை செய்யவைத்த கொடுமை!

still from Dosth
still from Dosth
Loading...

2001ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சரத்குமார் ரகுவரன் நடிப்பில் தோஸ்த் என்றொரு படம் வெளியானது. நண்பன் கொன்றுவிட்டான் என இன்சூரன்ஸ் பணத்துக்காக ஒளிந்துகொண்டு நாடகமாடும் வில்லனை ஹீரோ ஜெயிக்கும் கதை. கதையோட Knot நல்லாருக்கே என்றால், இருக்காதா பின்னே? Double Jeopardy என்ற ஆங்கிலப்படத்தின் அப்பட்ட காப்பி. தோஸ்த் பார்த்த பாதிப்பா இல்லை double Jeopardy படத்தை இந்தியிலும் ஆட்டையை போட்டு படமாக்கிவிட்டார்களா என தெரியவில்லை. ராஜஸ்தான், பில்வாரா பகுதியைச் சேர்ந்த 38 வயதான பல்பீர்சிங் கரோல், மேற்கண்ட இன்சூரன்ஸ் மோசடியில் ஈடுபட நினைத்து (அ)நியாயமாக உயிரை விட்டுள்ளார்.

Mercenaries

டீமானிட்டைசேஷன் கொடுமை வட்டி தொழில் செய்துவந்த பல்பீர்சிங்கையும் விட்டுவைக்கவில்லை. வெளியில் கொடுத்திருந்த கடன் எதுவும் திரும்ப வரவேயில்லை. இனிமேலும் தாக்குப்பிடிக்க முடியாது என தெரிந்துகொண்ட பல்பீர்சிங், மேற்கண்ட படங்களின் டிவிடி தேயுமளவுக்கு பார்த்திருப்பார் போல. கடந்தமாதம் ஒரு தனியார் இன்ஸூரன்ஸ் நிறுவனத்திற்குச் சென்று தன் பெயரில் 50 லட்சத்துக்கு காப்பீடு பெற்றுள்ளார். முதல் மாத தவனை கட்டியபிறகு, பாலிசி ஆக்டிவாக இருக்கிறது என தெரிந்துகொண்டபின், லோக்கல் ரவுடிகள் இருவரிடம் சென்று, தன்னை கொலை செய்ய ரேட் பேசியிருக்கிறார். பத்தாயிரம் அட்வான்ஸும், மீதம் 80,000 தன்னை கொலை செய்யும்போது சட்டை பாக்கெட்டிலேயே இருக்கும் என்று பேச்சு. சொன்னபடியே பல்பீர்சிங்கை கொன்று அவர்கள் 80,000 எடுத்துக்கொண்டு சென்றுவிட, சிசிடிவி, தொலைபேசி அழைப்புகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து கூலி கொலையாளிகளை போலிஸ் அள்ளிக்கொண்டுபோய் விசாரிக்க, மொத்த உண்மையும் வெளிவந்திருக்கிறது.

2018 TopTamilNews. All rights reserved.