“மம்தா கட்சியினர் சுட்டுக்கொலை… அமித் ஷாவின் சதி” – பதவி விலக வலுக்கும் குரல்!

“மம்தா கட்சியினர் சுட்டுக்கொலை… அமித் ஷாவின் சதி” – பதவி விலக வலுக்கும் குரல்!

மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதை விட அங்கு பெரிதும் பேசுபொருளாகியிருப்பது மத்திய பாதுகாப்புப் படையினர் திருணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த நால்வரை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இது ஆளும் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தலைவரான ஆவேசமாக பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார்.

“மம்தா கட்சியினர் சுட்டுக்கொலை… அமித் ஷாவின் சதி” – பதவி விலக வலுக்கும் குரல்!

இந்தச் செய்தியை அறிந்த அவர், “மத்திய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த 4 பேரின் உயிரிழப்புக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பதில் அளிக்க வேண்டும். மத்திய படையினர் செய்துவரும் செயல்களை எல்லாம் நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தற்காப்புக்காகத்தான் சுட்டோம் என்று மத்திய படையினர் கூறுகிறார்கள். இதுபோன்ற பொய்களைக் கூறுவதற்கு தேர்தல் ஆணையம் வெட்கப்பட வேண்டும்.

“மம்தா கட்சியினர் சுட்டுக்கொலை… அமித் ஷாவின் சதி” – பதவி விலக வலுக்கும் குரல்!

இதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும். மக்களின் ஆதரவை இழந்துவிட்டோம் என பாஜகவுக்குத் தெரிந்துவிட்டதால், மக்களைக் கொல்லும் சதியில் ஈடுபடுகிறார்கள். மத்திய உள்துறை அமைச்சரின் சதியின் ஒருபகுதிதான் இது. கொல்லப்பட்ட 4 பேருக்குப் பழிவாங்குதல் என்பது தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதுதான். தேர்தல் தொடங்கியதிலிருந்து 18 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் 12 பேர் நம்முடைய கட்சியைச் சேர்ந்தவர்கள்” என்று கொந்தளித்தார்.