மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்ற பிறகு மத்தியில் பா.ஜ.க. அரசை மாற்றுவோம்.. மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்ற பிறகு மத்தியில் பா.ஜ.க. அரசை மாற்றுவோம்.. மம்தா பானர்ஜி

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, மத்தியில் பா.ஜ.க. அரசை மாற்றுவோம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் வரும் 27ம் தேதி தொடங்கி மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் தலைவியும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: எனக்கு ஒரு கோரிக்கை உள்ளது.

மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்ற பிறகு மத்தியில் பா.ஜ.க. அரசை மாற்றுவோம்.. மம்தா பானர்ஜி
பா.ஜ.க.

தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. பணம் விநியோகம் செய்தால் உங்கள் தலையை அந்த பணத்துக்கு முன் தலை குனியாதீர்கள். இது பொதுமக்களின் பணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மாற்றம் மம்தா பானர்ஜியின் முழக்கம். மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, நாம் டெல்லிக்கு குதிப்போம் (செல்வோம்), மத்தியில் பா.ஜ.க. அரசை மாற்றுவோம்.

மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்ற பிறகு மத்தியில் பா.ஜ.க. அரசை மாற்றுவோம்.. மம்தா பானர்ஜி
இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி

பா.ஜ.க., கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஒரே குலத்தை சேர்ந்தவை. இந்த கூட்டத்தில் மாவோயிஸ்ட், இடதுசாரி அல்லது காங்கிரஸ் நண்பர்கள் இருந்தால், நான் அவர்களிடம் சொல்கிறேன் அந்த கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள். மம்தா பானர்ஜி என்றால் மக்களின் எனர்ஜி மற்றும் அவள் மக்களுடன் இணைந்து போராடுவாள். ஓட மாட்டாள் என்பது அவர்களுக்கு (பா.ஜ..க.) தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.