நேதாஜி பிறந்த நாளுக்கு தேசிய விடுமுறை கேட்கும் மம்தா.. அதெல்லாம் கூடாது என்று சொல்லும் நேதாஜி பேரன்

 

நேதாஜி பிறந்த நாளுக்கு தேசிய விடுமுறை கேட்கும் மம்தா.. அதெல்லாம் கூடாது என்று சொல்லும் நேதாஜி பேரன்

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் 2022 ஜனவரி 23ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது என்பது நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள். நேதாஜி பெங்காலின் சிறந்த மகன்களில் ஒருவர், அவர் ஒரு தேசிய ஹீரோ. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இந்தியாவின் சுதந்திர இயக்கத்தின் சின்னம். அனைத்து தலைமுறைகளுக்கும் அவர் ஒரு உத்வேகம். அவரது அயராத தலைமையின் கீழ், இந்திய தேசிய ராணுவத்தின் பல ஆயிரணக்கணக்கான வீரமிக்க வீரர்கள் தாய் நாட்டுக்காக உச்சபட்ச தியாகம் செய்தனர்.

நேதாஜி பிறந்த நாளுக்கு தேசிய விடுமுறை கேட்கும் மம்தா.. அதெல்லாம் கூடாது என்று சொல்லும் நேதாஜி பேரன்
மம்தா பானர்ஜி

மத்திய அரசு, நேதாஜியின் பிறந்த நாளான ஜனவரி 23ம் தேதியை ஒரு தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க, உங்கள் தலையீட்டைக் கோர விரும்புகிறேன். மேலும் நேதாஜி காணாமல் போனது தொடர்பான பிரச்சினைக்கு உறுதியான நிலைப்பாட்டை வழங்கவும், உண்மைகளை வெளிக்கொணரவும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மக்களுக்கு அவர்களின் சிறந்த தலைவருக்கு என்ன ஆனது என்பதை அறிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாய்ப்பை வழங்குதல். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

நேதாஜி பிறந்த நாளுக்கு தேசிய விடுமுறை கேட்கும் மம்தா.. அதெல்லாம் கூடாது என்று சொல்லும் நேதாஜி பேரன்
சந்திர குமார் போஸ்

இதற்கிடையே மம்தாவின் கோரிக்கை குறித்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சந்திர குமார் போஸ் கூறுகையில், சிறந்த விடுதலை போராட்ட வீரரின் பிறந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாக அறிவிப்பது முக்கியமில்லை. சிறந்த சுதந்திர போராட்ட வீரரான அவர் எப்போதும் நாட்டுக்காக பணியாற்ற விரும்பினார். நேதாஜியின் பிறந்த தினமான ஜனவரி 23ம் தேதியை தேசபக்தர்கள் தினம் அல்லது தேசிய அன்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.