மக்களே பா.ஜ.க.வை நம்பாதீங்க… தவறான கனவுகளை காட்டுறாங்க.. மம்தா பானர்ஜி எச்சரிக்கை

 

மக்களே பா.ஜ.க.வை நம்பாதீங்க… தவறான கனவுகளை காட்டுறாங்க.. மம்தா பானர்ஜி எச்சரிக்கை

தவறான கனவுகளை காட்டுறாங்க, பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கிறாங்க ஆகையால் பா.ஜ.க.வை நம்பாதீங்க என்று மக்களை மம்தா பானாஜி வலியுறுத்தினார்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. மேற்கு வங்கம் காஷிபுரில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அந்த கட்சியின் தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது:

மக்களே பா.ஜ.க.வை நம்பாதீங்க… தவறான கனவுகளை காட்டுறாங்க.. மம்தா பானர்ஜி எச்சரிக்கை
பா.ஜ.க.

அவர்கள் ஒரு பெரிய ஒரு பக்க விளம்பரத்தை கொடுக்கிறார்கள். நாங்கள் இதை செய்வோம், நாங்கள் அதை செய்வோம். நீங்கள் காண்பிக்கும் பொய்யான கனவுகள். அனைவரது வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தியுள்ளீர்களா? பா.ஜ.க.வை நம்பாதீங்க. அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே கொடுப்பார்கள். அவர்கள் துரோகிகள் மற்றும் மீர் ஜாபர்களின் கட்சி. அவர்கள் அரக்கர்கள் மற்றும் கொள்ளைக்காரர்களின் கட்சி. அவர்கள் ஏழை மக்களின் கட்சி அல்ல.

மக்களே பா.ஜ.க.வை நம்பாதீங்க… தவறான கனவுகளை காட்டுறாங்க.. மம்தா பானர்ஜி எச்சரிக்கை
வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு

ஜார்க்கண்டில் பா.ஜ.க. அரசாங்கம் பழங்குடி மக்களின் நில உரிமையை பறித்தது. ஆனால் எங்களது அரசாங்கம் பழங்குடிகளின் நில உரிமையை மீண்டும் அளித்தது. அவர்கள் பிர் கான்ஹூ சிலையை உடைத்தார்கள். ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் சிலையையும் உடைத்தார்கள். எனது அரசு வேலையின்மையை 50 சதவீதம் குறைத்தது, அதனை மேலும் 50 சதவீதம் குறைக்கும். ஜே.ஐ.சி.ஏ. குடிநீர் திட்டம் ஜப்பான் நிறுவனத்தால் தாமதம் ஆகிறது. இந்த திட்டம் ஓராண்டுக்குள் முடிந்தால், 2022 மார்ச் மாதத்துக்குள் புருலியா நகராட்சி மற்றும் 5 ஒன்றிய பகுதிகளில் உள்ள 8 லட்சம் மக்களுக்கு நீர் இணைப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.