மகாபாரத்தில் வரும் துரியோதனன், துச்சாதனனை விட பா.ஜ.க. மோசமானது… மம்தா பானர்ஜி

 

மகாபாரத்தில் வரும் துரியோதனன், துச்சாதனனை விட பா.ஜ.க. மோசமானது… மம்தா பானர்ஜி

மகாபாரத்தில் வரும் துரியோதனன், துச்சாதனனை விட பா.ஜ.க மோசமானது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் பபானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் பபானிபூர் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த புதன்கிழமையன்று தொண்டர்கள் சந்திப்புடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மம்தா பானர்ஜி பேசியதாவது: பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசாங்கம் தனது நிர்வாகம் குறித்து கேள்வி எழுப்பும் மக்களை தேவையில்லாமல் துன்புறுத்துகிறது. இது எங்களை தொந்தரவு செய்ய பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் சதி திட்டம்.

மகாபாரத்தில் வரும் துரியோதனன், துச்சாதனனை விட பா.ஜ.க. மோசமானது… மம்தா பானர்ஜி
பா.ஜ.க.

மகாபாரத்தில் வரும் துரியோதனனும், துச்சாதனனும் கூட பா.ஜ.க.வை போல் மோசமானவர்கள் அல்ல. காங்கிரஸ், ஆர்.ஜே.டி. சரத் பவார்ஜி ஆகியோரை துன்புறுத்துவதற்கு இதே நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். நந்திகிராம் சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜ.கவின் சதியால் நான் தோல்வி அடைந்தேன். பா.ஜ.க.வின் சதியால் நான் மீண்டும் இடைத்தேர்தல் போட்டியிடுகிறேன். மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், அமலாக்கத் துறை, சி.பி.ஐ. போன்ற விசாரணை அமைப்புகளால் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

மகாபாரத்தில் வரும் துரியோதனன், துச்சாதனனை விட பா.ஜ.க. மோசமானது… மம்தா பானர்ஜி
மோடி, அமித் ஷா

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற நாம் எப்படி எல்லா முரண்பாடுகளையும் எதிர்த்து போராடினோம் என்பது நமக்கு மட்டுமே தெரியும். தேர்தலின்போது மற்ற மாநிலங்களிலிருந்து குண்டர்களை பா.ஜ.க. அழைத்து வந்தது. எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டதால் நான் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டியிருந்தது. பா.ஜ.க. பழிவாங்கும் அரசியலை பின்பற்றுகிறது. அபிஷேக் பானர்ஜியை குறிவைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.