துர்கா பூஜை கிடையாது என அரசு சொன்னதாக நிரூபித்தால் 101 தோப்புக்கரணம் போடுகிறேன்.. மம்தா பானர்ஜி சவால்

துர்கா பூஜை கிடையாது என அரசு சொன்னதாக நிரூபித்தால் 101 தோப்புக்கரணம் போடுகிறேன்.. மம்தா பானர்ஜி சவால்

மேற்கு வங்க அரசு இந்த ஆண்டு துர்கா பூஜை கிடையாது என சொன்னதாக நிரூபித்தால் மக்கள் முன்னால் 101 தோப்புக்கரணம் போடுகிறேன் என முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை மிகவும் விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. துர்கா பூஜை என்பது 5 நாட்கள் நடைபெறும். அம்மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களை பாண்டல்களில் ஈர்க்கிறது. இந்த ஆண்டு துர்கா பூஜை அக்டோபர் 22ம் தேதி தொடங்கி 26ம் தேதி முடிவடையும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மேற்கு வங்க அரசு இந்த ஆண்டு துர்கா பூஜையை நடத்தாது என ஒரு வதந்தி அம்மாநிலத்தில் தீயாக பரவியது.

துர்கா பூஜை கிடையாது என அரசு சொன்னதாக நிரூபித்தால் 101 தோப்புக்கரணம் போடுகிறேன்.. மம்தா பானர்ஜி சவால்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ஒரு அரசியல் கட்சி துர்கா பூஜை குறித்து கெட்ட வதந்திகளை பரப்புகிறது. துர்கா பூஜை தொடர்பாக இதுவரை திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான அரசு எந்தவொரு கூட்டத்தையும் நடத்தவில்லை என சொல்கிறது. இந்த ஆண்டு துர்கா பூஜை கிடையாது என அரசு சொன்னதாக யாரேனும் நிரூபித்தால், மக்கள் முன்னால் நான் 101 தோப்புக்கரணம் போடுகிறேன் என தெரிவித்தார்.

துர்கா பூஜை கிடையாது என அரசு சொன்னதாக நிரூபித்தால் 101 தோப்புக்கரணம் போடுகிறேன்.. மம்தா பானர்ஜி சவால்
தோப்புக்கரணம்

சர்வதேச அளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்துக்கு வந்தள்ளது. மேற்கு வங்கத்தில் நேற்று நிலவரப்படி, 23,216 பேர் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 3,620ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில், துர்கா பூஜை குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.