பா.ஜ.க. கலவரத்தை விரும்புகிறது.. நாங்கள் அமைதியை விரும்புகிறோம்.. மம்தா பானர்ஜி

 

பா.ஜ.க. கலவரத்தை விரும்புகிறது.. நாங்கள் அமைதியை விரும்புகிறோம்.. மம்தா பானர்ஜி

பா.ஜ.க. கலவரத்தை விரும்புகிறது. நாங்கள் அமைதியை விரும்புகிறோம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்கம் கொல்கத்தாவின் கீதாஞ்சலி மைதானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அந்த கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: திரிணாமுல காங்கிரசிலிருந்து சில துரோகிகளை எடுத்து மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. ஒரு பார்முலாவை பயன்படுத்துகிறது.

பா.ஜ.க. கலவரத்தை விரும்புகிறது.. நாங்கள் அமைதியை விரும்புகிறோம்.. மம்தா பானர்ஜி
பா.ஜ.க.

பா.ஜ.க.வுக்கு செல்வோர்கள் அவர்கள் (பா.ஜ.க.) எல்லாம் கலகக்காரர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அங்கு (பா.ஜ.க.) செல்வபவர்கள் நிறைய பணம் சம்பாதிப்பதால் தங்களது சொத்துக்களையும், தங்களையும் பாதுகாக்க வைத்திருக்க அதனை செய்கிறார்கள். திரிணாமுல் காங்கிரசுக்கு மாற்று திரிணாமுல் காங்கிரஸ்தான். அவர்கள் (பா.ஜ.க.) கலகத்தை விரும்புகிறார்கள், நாங்கள் அமைதியை விரும்புகிறோம்.

பா.ஜ.க. கலவரத்தை விரும்புகிறது.. நாங்கள் அமைதியை விரும்புகிறோம்.. மம்தா பானர்ஜி
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு

பா.ஜ.க. பற்றி எச்சரிக்கையாக இருங்கள். ஆகையால் நாங்கள் பா.ஜ.க.வை விரும்பவில்லை, கலவரத்தை விரும்பவில்லை, ஊழல் விரும்பவில்லை மற்றும் நம் நாடு உடைக்கப்படுவதை விரும்பவில்லை என்ற முழக்கம் உள்ளது. லாக்டவுன் சமயத்தில் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தார்கள். அவர்கள் (மத்திய அரசு) ரயில் கட்டணம் கூட கொடுக்கவில்லை. ஆனால் சில திருடர்களை டெல்லிக்கு அழைத்து வர அதிகளவில் அவர்கள் செலவிட்டார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை அவர்கள் திரும்ப பெறமாட்டர்கள். நான் சொல்கிறேன் அதனை திரும்ப பெற வேண்டும். மேற்கு வங்கத்தில் அதனை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.