பா.ஜ.க.வை விட பெரிய திருடன் யாரும் இல்லை… மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்

 

பா.ஜ.க.வை விட பெரிய திருடன் யாரும் இல்லை… மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்

பா.ஜ.க.வை விட பெரிய திருடன் யாரும் இல்லை, அவர்கள் சம்பலின் டகோயிஸ்ட் (ஆயுதம் ஏந்திய கொள்ளைக்கார கும்பல்) என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க.வை விட பெரிய திருடன் யாரும் இல்லை. அவர்கள் சம்பலின் டகோயிஸ்ட். 2014, 2016 மற்றும் 2019 தேர்தல்களின்போது பா.ஜ.க., மேற்கு வங்கத்தில் 7 தேயிலை தோட்டங்கள் திறக்கப்படும் மற்றும் அதை மத்திய அரசு கையகப்படுத்தும் என்று வாக்குறுதி கொடுத்தது.

பா.ஜ.க.வை விட பெரிய திருடன் யாரும் இல்லை… மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்
முதல்வர் மம்தா பானர்ஜி

ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. தற்போது வேலைவாய்ப்புகளை வழங்குவதாக கூறுகிறது. அவர்கள் ஏமாற்றுகிறார்கள். அவர்கள் (பா.ஜ.க.) குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) அல்லது தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) அமல்படுத்தப்படும் என்று என்கிறார்கள். என்.ஆர்.சி.க்கும், என்.பி.ஆருக்கும் என்ன வித்தியாசம்?. இங்கியிருந்து அசாம் மிக அருகில் உள்ளது. அங்கு என்.ஆர்.சி. பட்டியலிருந்து 19 லட்சம் பெங்காலிகளின் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வை விட பெரிய திருடன் யாரும் இல்லை… மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்
அசாதுதீன் ஓவைசி

மேற்கு வங்கத்தில் அகதிகள் காலனிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆகையால் என்.ஆர்.சி., சி.ஏ.ஏ. மற்றும் என்.பி.ஆர். குறித்து யாரும் பயப்பட தேவையில்லை. சமூகங்கள் மத்தியில் கலவரம் மற்றும் வெறுப்பு என்ற புதிய மதத்தை பா.ஜ.க. உருவாக்கியுள்ளது. ஹைதராபத்திலிருந்து ஒரு கட்சியை (அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்.) பா.ஜ.க. பிடித்துள்ளது மற்றும் சிறுபான்மை வாக்குகளை பிரிக்க பல கோடி ரூபாய் செலவிடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.