என் மீது நம்பிக்கை வையுங்க.. நிபந்தனையற்ற, தன்னலமற்ற சேவை நான் தருகிறேன்.. மம்தா பானர்ஜி

 

என் மீது நம்பிக்கை வையுங்க.. நிபந்தனையற்ற, தன்னலமற்ற சேவை நான் தருகிறேன்.. மம்தா பானர்ஜி

மேற்கு வங்க சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த போது, என் மீது நம்பிக்கை வையுங்க, நிபந்தனையற்ற மற்றும் தன்னலமற்ற சேவையை நான் மிகுந்த அர்ப்புணிப்புடன் தருகிறேன் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தற்போதைய ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. மம்தா பானர்ஜி 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தேர்தலை மனதில் வைத்து பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

என் மீது நம்பிக்கை வையுங்க.. நிபந்தனையற்ற, தன்னலமற்ற சேவை நான் தருகிறேன்.. மம்தா பானர்ஜி
மூத்த குடிமக்கள்

மேற்கு வங்கத்தின் 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் முக்கியமாக, 60 வயதை கடந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குவதற்காக ரூ1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார காப்பீட்டு அட்டை திட்டமான ஸ்வஸ்தியா சத்திக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ. மற்றம் மதிர் கிருஷ்டி ஆர்லாண்ட் போன்ற திட்டங்களை செயல்படுத்த ரூ.12,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஸ்.சி/எஸ்.டி சமுகத்தை சேர்ந்தவர்களுக்கு 20 லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

என் மீது நம்பிக்கை வையுங்க.. நிபந்தனையற்ற, தன்னலமற்ற சேவை நான் தருகிறேன்.. மம்தா பானர்ஜி
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

மம்தா பானர்ஜி தனது பட்ஜெட் உரையை முடிக்கும்போது, நேதாஜியின் அழியாத செய்திகளில் ஒன்று உத்வேகம் அளிக்கிறது. நேதாஜி நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது, எனக்கு ரத்தம் கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரம் தருவேன் என்று சொன்னார். நான் என் மாநில மக்களிடம், என் மீது நம்பிக்கை வையுங்க, நிபந்தனையற்ற மற்றும் தன்னலமற்ற சேவையை நான் மிகுந்த அர்ப்பணிப்புடன் தருவேன் என்று சொல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.