பா.ஜ.க.வை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவது அவசியம்… மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

 

பா.ஜ.க.வை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவது அவசியம்… மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

பா.ஜ.க.வை தோற்கடிக்க அனைவரும் (எதிர்க்கட்சிகள்) ஒன்றிணைவது அவசியம் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி தற்போது டெல்லியில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். டெல்லியில் சோனியா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் என பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான எதிர்கட்சிகளின் கூட்டணியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

பா.ஜ.க.வை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவது அவசியம்… மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி நேற்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சோனியா ஜி என்னை தேநீர் விருந்துக்கு அழைத்தார். ராகுல் ஜியும் இருந்தார். நாங்கள் பொதுவாக அரசியல் நிலவரம், பெகாசஸ், கோவிட் நிலைமை பற்றி விவாதித்தோம். மேலும் எதிர்கட்சிகளின் ஒற்றுமை குறித்து விவாதித்தோம். இது ஒரு நல்ல சந்திப்பு. எதிர்காலத்தில் சாதகமான முடிவு வெளிவர வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

பா.ஜ.க.வை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவது அவசியம்… மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
சோனியா, ராகுல் காந்தி


பா.ஜ.க.வை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவது அவசியம். தனியாக, நான் ஒன்றுமில்லை. எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியிருக்கும். நான் ஒரு தலைவர் அல்ல. நான் ஒரு சேனை. நான் தெருவை சேர்ந்தவள். பெகாசஸ் பிரச்சினைக்க அரசாங்கம் ஏன் பதிலளிக்கவில்லை? மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவுகள் எடுக்கப்படாவிட்டால் அங்கு விவாதங்கள் நடத்தப்படாவிட்டால், அது எங்கே நடக்கும்? இது தேநீர் கடைகளில் நடக்காது, இது நாடாளுமன்றத்தில் நடத்தப்படுகிறது.