கொரோனா வைரஸ் நிலைமையை மறைக்க பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்கள் சூழ்ச்சி.. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் நிலைமையை மறைக்க பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்கள் சூழ்ச்சி.. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் நிலைமையை மறைக்க பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்களில் சூழ்ச்சி நடைபெறுகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் மாவட்டம் பெஹ்ராம்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி காணொலி வாயிலாக தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: மேற்கு வங்கம் மட்டுமே மத்திய அரசுக்கு எதிராக நிற்கிறது மற்றும் அதை போலவே சொல்கிறது. அதனால்தான் இந்த தேர்தல் முக்கியமானது. இந்த தேர்தல்களை நாடு முழுவதும் பார்த்து கொண்டு இருக்கிறது. நமது ஆக்சிஜன் உத்தர பிரதேசத்துக்கு திருப்பிவிடப்படுகிறது.

கொரோனா வைரஸ் நிலைமையை மறைக்க பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்கள் சூழ்ச்சி.. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
ஆக்சிஜன் சிலிண்டர்கள்

பிரதமர் மோடி பேச்சுகளை (தேர்தல் பிரசாரம்) கொடுத்து விட்டு ஒடி விட்டார். இப்போதுக்குள் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு இருந்தால் பாதிப்பு குறைவாக இருந்திருக்கும். அவர் 80 நாடுகளுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கினார். பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்கள் நிலைமையை மறைக்க சூழ்ச்சிகளை பயன்படுத்துகின்றன. உத்தர பிரதேசத்தில் தகன மைதானங்களை சுற்றி சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அசாம் மற்றும் திரிபுராவிலும் இதேதான்.

கொரோனா வைரஸ் நிலைமையை மறைக்க பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்கள் சூழ்ச்சி.. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
தகன மைதானத்தை சுற்றி சுவர் ஏற்படுத்தும் பணியாளர்கள்ட

நீங்கள் பிளவுகள் இல்லாத வங்காளத்தில் இருப்பது அதிர்ஷ்டம். கோவிட் நோயாளிகளுக்கு 60 சதவீத படுக்கைகளை ஒதுக்குமாறு 100 தனியார் மருத்துவமனைகளை அரசு கேட்டுள்ளது. பிரதமர் ஒரு நாடு ஒரு தலைவர் என்கிறார். ஏன் தடுப்பூசிக்கு ஒரே விலை இல்லை? ஏன் மத்திய அரசுக்கு ஒரு விலை? மாநிலங்களுக்கு வேறொரு விலை? ஏன் அனைத்து தடுப்பூசிகளும் குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்துக்கு செல்கின்றன?