போலீஸ்காரர்கள் போல் மாறுவேடத்தில் பா.ஜ.க.வினர்.. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

 

போலீஸ்காரர்கள் போல் மாறுவேடத்தில் பா.ஜ.க.வினர்.. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கிராமத்தினரை மிரட்டி தங்களுக்கு வாக்களிக்க செய்வதற்காக பா.ஜ.க.வினர் போலீஸ்காரர்கள் போல் மாறுவேடமிட்டுள்ளதாக எனக்கு தகவல் வந்துள்ளது என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. 30 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் கடந்த 27ம் தேதியன்று நடந்தது. அடுத்து ஏப்ரல் 1ம் தேதியன்று 2ம் கட்டமாக 30 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நந்திகிராம் தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில்தான் மம்தா பானர்ஜியும், சுவேந்து ஆதிகாரியும் மோதுகின்றனர்.

போலீஸ்காரர்கள் போல் மாறுவேடத்தில் பா.ஜ.க.வினர்.. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
சி.பி.எம்.

மேற்கு வங்கம் நந்திகிராமில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சந்தையில் காவலர் சீருடை வாங்கியதாகவும், அடுத்த கட்ட தேர்தல்களில் கிராமத்தினரை பயமுறுத்தி தங்களுக்கு வாக்களிக்க செய்வதற்காக பா.ஜ.க. தொண்டர்கள் போலீஸ்காரர்கள் போல் மாறுவேடமிட்டுள்ளதாக எனக்கு செய்தி வந்துள்ளது.

போலீஸ்காரர்கள் போல் மாறுவேடத்தில் பா.ஜ.க.வினர்.. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
பா.ஜ.க.

இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே பா.ஜ.க. மோதலை உருவாக்குகிறது. நந்திகிராமில் ஒரு போராட்டம் ஏற்படும்போது, இந்துக்கள் சங்கை ஊதுவார்கள், முஸ்லிம்கள் அசான் ஒதுவார்கள். இரு சமுதாய மக்களும் எப்போதும் இணைந்து பணியாற்றுவார்கள். அப்போது பிளவு மற்றும் ஆட்சி முறை எதுவும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.