காட்டுமிராண்டித்தனமான, வெட்கக்கேடான ஹத்ராஸ் சம்பவத்தை கண்டிக்க வார்த்தைகள் இல்லை.. மம்தா பானர்ஜி

 

காட்டுமிராண்டித்தனமான, வெட்கக்கேடான ஹத்ராஸ் சம்பவத்தை கண்டிக்க வார்த்தைகள் இல்லை.. மம்தா பானர்ஜி

உத்தர பிரதேசத்தில் நடந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் வெட்கக்கேடான ஹத்ராஸ் பாலியல் பலாத்காரத்துக்கு சம்பவத்தை கண்டிக்க வார்த்தைகள் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கடந்த செப்டம்பர் 14ம் தேதியன்று 19 வயதான தலித் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸ் சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

காட்டுமிராண்டித்தனமான, வெட்கக்கேடான ஹத்ராஸ் சம்பவத்தை கண்டிக்க வார்த்தைகள் இல்லை.. மம்தா பானர்ஜி
ஹத்ராஸ் பெண்ணின் இறுதி சடங்கு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியும் ஹத்ராஸ் சம்பவம் குறித்து தனது வேதனையை தெரிவித்துள்ளார். ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக மம்தா பானர்ஜி டிவிட்டரில், ஹத்ராஸில் நடந்த இளம் தலித் பெண் சம்பந்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான மற்றும் வெட்கக்கேடான சம்பவத்தை கண்டிக்க வார்த்தைகள் இல்லை.

காட்டுமிராண்டித்தனமான, வெட்கக்கேடான ஹத்ராஸ் சம்பவத்தை கண்டிக்க வார்த்தைகள் இல்லை.. மம்தா பானர்ஜி
முதல்வர் யோகி ஆதித்யநாத்

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். குடும்பத்தினர் இல்லாமல் அல்லது அவர்களின் சம்மதம் இல்லாமல் அந்த பெண்ணின் உடலை தகனம் செய்தது பெரிதும் வெட்கக்கேடானது. ஓட்டுக்காக கோஷங்களையும், உயர்ந்த வாக்குறுதிகளையும் பயன்படுத்தியவர்களை இந்த சம்பவம் அம்பலப்படுத்துகிறது என பதிவு செய்து இருந்தார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம், வீடு வழங்கப்படும் என்றும், அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் நேற்று முன்தினம் அந்த குடும்பத்தினருடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பேசி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.