லாக்டவுன் குறித்து மத்திய அரசால் மட்டும் தனியாக முடிவு எடுக்க முடியாது.. மம்தா பானர்ஜி ஆவேசம்…

லாக்டவுன் குறித்து மத்திய அரசால் மட்டும் தனியாக முடிவு எடுக்க முடியாது.. மம்தா பானர்ஜி ஆவேசம்…

லாக்டவுன் நடைமுறைப்படுத்துவது குறித்து மத்திய அரசால் தனியாக முடிவு எடுக்க முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் 29ம் தேதியன்று அன்லாக் 4.0 விதிமுறைகளை வெளியிட்டது. கடந்த 1ம் தேதி முதல் அன்லாக் 4.0 வழிகாட்டு விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி, நோய் கட்டுப்படுத்துதல் பகுதிக்கு வெளியே, மத்திய அரசிடம் முறையாக ஆலோசிக்காமல் மாநில அரசுகள் உள்ளூர் லாக்டவுன் விதிக்கக்கூடாது.

லாக்டவுன் குறித்து மத்திய அரசால் மட்டும் தனியாக முடிவு எடுக்க முடியாது.. மம்தா பானர்ஜி ஆவேசம்…
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது: குறிப்பிட்ட பகுதியில் உள்ள கோவிட்-19 குறித்த களநிலவரம் குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு கூடுதல் தகவல் தெரியும் என்பதால் மாநிலங்களில் லாக்டவுனை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசால் மட்டுமே முடிவு செய்ய முடியாது.

லாக்டவுன் குறித்து மத்திய அரசால் மட்டும் தனியாக முடிவு எடுக்க முடியாது.. மம்தா பானர்ஜி ஆவேசம்…
மத்திய உள்துறை அமைச்சகம்

மாநில அரசுகளை மத்திய அரசு நம்ப வேண்டும், லாக்டவுன் தொடர்பாக முடிவு எடுப்பதற்கு அவர்களுக்கு முழு அதிகாரம் கொடுங்க. இதுதான் நம்முடைய கூட்டாட்சியின் அடிப்படை ஆகையால் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், அம்மாநிலத்தில் வரும் 7,11 மற்றும் 12ம் தேதிகளில் தளர்வு இல்லாத லாக்டவுனை அமல்படுத்த மம்தா பானர்ஜி அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.