மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியை தக்கவைத்து கொள்வார்… தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு

 

மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியை தக்கவைத்து கொள்வார்… தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு

மேற்கு வங்கத்தில் டைம்ஸ் நவ்- சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில், மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது என்று தெரியவந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் 27ம் தேதி தொடங்கி மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த கருத்து கணிப்புகளின்படி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக்கொள்வார். இருப்பினும் முன்பை காட்டிலும் அவருக்கு மெஜாரிட்டி கொஞ்சம் குறையும்.

மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியை தக்கவைத்து கொள்வார்… தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு
திரிணாமுல் காங்கிரஸ்

டைம்ஸ் மற்றும் சி வோட்டர்ஸின் தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பின்படி, இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 146 முதல் 162 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்ளும். 2016ல் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 211 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. அதேசமயம், மேற்கு வங்கத்தில் புதிய சக்தியாக உருவெடுத்து வரும் பா.ஜ.க. எதிர்வரும் தேர்தலில் 99 முதல் 115 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிப்பு கூறுகிறது. கடந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இந்த தேர்தலில் சறுக்கலை சந்திக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 29 முதல் 37 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிப்புகள் கூறுகின்றன.

மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியை தக்கவைத்து கொள்வார்… தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு
பா.ஜ.க.

இந்த கருத்து கணிப்பில் வாக்கு சதவீதம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி வாக்கு பங்கு அடிப்படையில் பார்த்தால் திரிணாமுல் காங்கிரசுக்கும் (42.2 சதவீதம்), பா.ஜ.க.வுக்கும் (37.5 சதவீதம்) அதிக வித்தியாசம் இருக்காது. மம்தாவுக்கு கடந்த தேர்தலை காட்டிலும் 2 சதவீதம் குறையும். ஆனால் பா.ஜ.க. கடந்த தேர்தலில் 10.2 சதவீதம் வாக்குகளே பெற்று இருந்தது. எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் வாக்கு சதவீதம் 14.8 சதவீதமாக இருக்கும். கடந்த தேர்தலில் காங்கிரஸ் 23 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது