அவங்க மாநிலத்தில் கொரோனா வைரஸை பரப்பிய பின்னர் போவார்கள்.. பா.ஜ.க. மீது மம்தா பானர்ஜி வினோதமான குற்றச்சாட்டு

அவங்க மாநிலத்தில் கொரோனா வைரஸை பரப்பிய பின்னர் போவார்கள்.. பா.ஜ.க. மீது மம்தா பானர்ஜி வினோதமான குற்றச்சாட்டு

இந்த மக்கள் மாநிலத்தில் கொரோனா வைரஸை பரப்பிய பின்னர் போவார்கள் என பா.ஜ.க. மீது மம்தா பானர்ஜி வினோதமான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேற்கு வங்கம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள தாப்கிராம் புல்பாரி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: இந்த மக்கள் (பா.ஜ.க.) மாநிலத்தில் கோவிட்-19ஐ பரப்புவார்கள், பின் சென்று விடுவார்கள். கடந்த ஆண்டு கோவிட்-19 இருந்தபோது, பா.ஜ.க. தலைவர்கள் யாரும் மாநிலத்துக்கு வரவில்லை.

அவங்க மாநிலத்தில் கொரோனா வைரஸை பரப்பிய பின்னர் போவார்கள்.. பா.ஜ.க. மீது மம்தா பானர்ஜி வினோதமான குற்றச்சாட்டு
பிரதமர் மோடி

இதுவரை தேர்தல் நடத்தப்பட்ட 135 சட்டப்பேரவை தொகுதிகளில் 100ல் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் தேர்தல்கள் முடிந்த பிறகு, மொத்தமுள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளில் பா.ஜ.க. 70 இடங்களில் கூட வெற்றி பெறாது என என்னால் சொல்ல முடியும். திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் மாநிலத்தில் ஆட்சி்க்கு வந்தால் உங்களை அச்சறுத்தும் , சர்ச்சைக்குரிய என்ஆர்சி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகியவற்றை கொண்டுவர அனுமதிக்கமாட்டோம். நீங்கள் அனைவரும் குடிமக்கள், என்னுடைய வேண்டுள் நீங்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பது மட்டும்தான்.

அவங்க மாநிலத்தில் கொரோனா வைரஸை பரப்பிய பின்னர் போவார்கள்.. பா.ஜ.க. மீது மம்தா பானர்ஜி வினோதமான குற்றச்சாட்டு
பா.ஜ.க.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தபோது பல்வேறு மாநிலங்களில் இருந்த மேற்குவங்க மக்களை என்னுடைய அரசுதான் செலவு செய்து சொந்த மாநிலத்துக்கு அழைத்துவந்தது. ஆனால், எந்த பா.ஜ.க தலைவர்களும் இதற்கு உதவவில்லை, அப்போது வெளியே வரவில்லை. பாஜக என்பது மக்கள் விரோத கட்சி, ஏழைகளுக்கு எதிரானக் கட்சி, ஏழைகளுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்துதான் உணவுப்பொருட்களை விலை ஏற அனுமதி்க்கிறது, பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை அனுமதிக்கிறது, சமையல் சிலிண்டர் விலையை விண்அளவுக்கு உயர்த்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்,