தைரியம் இருந்தா உங்க பையன் ஜெய் ஷாவை அரசியல் களமிறக்குங்க.. அமித் ஷாவுக்கு சவால் விட்ட மம்தா பானர்ஜி

 

தைரியம் இருந்தா உங்க பையன் ஜெய் ஷாவை அரசியல் களமிறக்குங்க.. அமித் ஷாவுக்கு சவால் விட்ட மம்தா பானர்ஜி

தைரியம் இருந்தா உங்கள் மகன் ஜெய் ஷாவை அரசியல் களமிறக்குங்க என்று அமித் ஷாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசின் ஆட்சி காலம் வரும் மே 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனால் 294 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தல் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு இடையிலான போட்டியாக கருதப்படுகிறது.

தைரியம் இருந்தா உங்க பையன் ஜெய் ஷாவை அரசியல் களமிறக்குங்க.. அமித் ஷாவுக்கு சவால் விட்ட மம்தா பானர்ஜி
அபிஷேக் பானர்ஜி, மம்தா பானர்ஜி

எதிர்வரும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி எம்.பி.யாக இருப்பதுடன், கட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருப்பதை குறி்ப்பிட்டு திரிணாமுல் காங்கிரஸ் குடும்ப அரசியல் கட்சி என்று அமித் ஷா உள்பட பல பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகின்றனர். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவியும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். சவுத் 24 பர்கானவில் பைலன் பகுதியில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பேரணியில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அந்த பேரணியில் மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது:

தைரியம் இருந்தா உங்க பையன் ஜெய் ஷாவை அரசியல் களமிறக்குங்க.. அமித் ஷாவுக்கு சவால் விட்ட மம்தா பானர்ஜி
திரிணாமுல் காங்கிரஸ்

அபிஷேக் எளிதாக மாநிலங்களவையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக ஆகியிருக்க முடியும். ஆனால் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு மக்களின் ஆணையுடன் நாடாளுமன்றத்துக்குள் சென்றார். அபிஷேக் பானர்ஜி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி. தைரியம் இருந்தால் அமித் ஷா தனது மகன் ஜெய் ஷாவை அரசியலில் களமிறக்கும்படி நான் சவால் விடுகிறேன். உங்கள் மகன் கிரிக்கெட் நிர்வாகத்தின் ஒரு அங்கமாகி நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை எவ்வாறு சம்பாதித்தார்? எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும், பெரும்பான்மையான வாக்குகளை பெறும் மற்றும் அதிக எண்ணிக்கையிலான இடங்களை வெல்லும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.