அரக்கர்களின் கட்சி பா.ஜ.க… இது போன்ற இரக்கமற்ற, கொடூரமான பிரதமரை ஒரு பார்த்ததில்லை.. மம்தா பானர்ஜி

அரக்கர்களின் கட்சி பா.ஜ.க… இது போன்ற இரக்கமற்ற, கொடூரமான பிரதமரை ஒரு பார்த்ததில்லை.. மம்தா பானர்ஜி

அரக்கர்களின் கட்சி பா.ஜ.க., இது போன்ற இரக்கமற்ற, கொடூரமான பிரதமரை ஒரு போதும் பார்த்தது இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு இம்மாதம் 27ம் தேதி முதல் மொத்தம் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நந்தகுமார் பகுதியில் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:

அரக்கர்களின் கட்சி பா.ஜ.க… இது போன்ற இரக்கமற்ற, கொடூரமான பிரதமரை ஒரு பார்த்ததில்லை.. மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

பா.ஜ.க. என்பது பாரதிய மோசமான கட்சி. நான் 7 முறை மக்களவை எம்.பி. இருந்துள்ளேன். நான் பல பிரதமர்களை பார்த்து உள்ளேன். ஆனால் இது போன்ற இரக்கமற்ற, கொடூரமான பிரதமரை நான் ஒரு போதும் பார்த்தது இல்லை. அரக்கர்கள், பேய்கள், இராவணன், துரியோதனன், துஷாசனா, அமைதியின்மை மற்றும் பயங்கரவாதத்தின் கட்சி பா.ஜ.க.. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரக்கர்களின் கட்சி பா.ஜ.க… இது போன்ற இரக்கமற்ற, கொடூரமான பிரதமரை ஒரு பார்த்ததில்லை.. மம்தா பானர்ஜி
பா.ஜ.க.

எதிர்வரும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது. இருப்பினும், இந்த தேர்தல் திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையிலான நேரடி போட்டியாக கருதப்படுகிறது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.