பா.ஜ.க. என்ன சொல்கிறதோ அதை தான் நீங்கள் செய்கிறீர்கள்.. தேர்தல் ஆணையத்தை தாக்கிய மம்தா பானர்ஜி.

பா.ஜ.க. என்ன சொல்கிறதோ அதை தான் நீங்கள் செய்கிறீர்கள்.. தேர்தல் ஆணையத்தை தாக்கிய மம்தா பானர்ஜி.

பா.ஜ.க. என்ன சொல்கிறதோ அதை தான் நீங்கள் செய்கிறீர்கள் என தேர்தல் ஆணையத்தை மம்தா பானர்ஜி தாக்கினார்.

மேங்கு வங்கம் கால்சியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: அனைத்து தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் தடுப்பூசிகளை வழங்குவதாக மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால் அது இன்னும் கொடுக்கப்படவில்லை. வெளிமாநிலங்களிலிருந்து வெளியாட்கள் குண்டர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் மாநிலத்தில் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கோவிட்-19 உடன் இங்கு வந்துள்ளனர். அவர்கள் மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸை பரப்புகின்றனர்.

பா.ஜ.க. என்ன சொல்கிறதோ அதை தான் நீங்கள் செய்கிறீர்கள்.. தேர்தல் ஆணையத்தை தாக்கிய மம்தா பானர்ஜி.
பா.ஜ.க.

பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களை நடத்த மாநிலத்துக்கு வெளியே உள்ளவர்களை பயன்படுத்துகிறார். அவர்களில் சுமார் 12 முதல் 14 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்துக்கு வெளியே இருந்து வருபவர்கள் ஆர்.டி-பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர் கொரோனா வைரஸ் பரிசோதனையை முடித்த பிறகே அவர் மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்தல் கட்டங்களை ஒன்றிணைத்து ஒரே கட்டமாக நடத்த நாங்கள் கேட்டோம். ஆனால் அவர்கள் (தேர்தல் ஆணையம்) செய்யவில்லை.

பா.ஜ.க. என்ன சொல்கிறதோ அதை தான் நீங்கள் செய்கிறீர்கள்.. தேர்தல் ஆணையத்தை தாக்கிய மம்தா பானர்ஜி.
இந்திய தேர்தல் ஆணையம்

ஆனால் அவர்கள் நேரங்களை குறைத்தனர். ஏன்? பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் கூட்டங்கள் எதுவும் இல்லாததால் நீங்கள் (தேர்தல் ஆணையம்) எங்கள் பிரசாரத்தின் 4 நாட்களை குறைத்தீர்கள். என்னை தடுக்க நீங்கள் இதை செய்துள்ளீர்கள். பா.ஜ.க. என்ன செய்ய சொல்கிறதோ, அதை நீங்கள் செய்கிறீர்கள். 4 கட்ட தேர்தல்களை ஒன்றிணைத்து ஒரே கட்டமாக நடத்துவது தொடர்பாக சொந்தமாக சிந்திக்கும் திறன் உங்களுக்கு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.