5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் மால்கள் திறப்பு!

 

5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் மால்கள் திறப்பு!

அரசு அனுமதி அளித்ததின் படி சென்னையில் அனைத்து மால்களும் இன்று திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் தியேட்டர்கள், மால்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அந்த இடங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியானது. அதனால் உரிய கட்டுப்பாடு நடவடிக்கைகளுடன் அனைத்தையும் திறக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் மால்கள் திறப்பு!

அதன் படி சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டு தலங்கள், மால்கள், பேருந்துகள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் என எல்லாவற்றுக்கும் அரசு அனுமதி அளித்தது. ஆனால் தியேட்டர்கள், பள்ளி கல்லூரிகள் மற்றும் ரயில் சேவைக்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று அனுமதி அளிக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டது.

5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் மால்கள் திறப்பு!

அரசு அறிவிப்பின் படி இன்று அனைத்து சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பிறகு இன்று பேருந்துகள் இயக்கப்படுவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சென்னையில் pheonix, forum, express avenue உள்ளிட்ட அனைத்து மால்களும் திறக்கப்பட்டுள்ளன. 5 மாதங்களுக்கு பிறகு மால்கள் திறக்கப்படுவதால் மக்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.