மால்கள் திறப்பு.. கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை அறிவித்தது தமிழக அரசு!

 

மால்கள் திறப்பு.. கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை அறிவித்தது தமிழக அரசு!

கொரோனா வைரஸ் பாதிப்பால் மால்கள், கோவில்கள், ஹோட்டல்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் 8 ஆம் தேதிக்கு பிறகு திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் படி இன்று நாடு முழுவதும் பல கோவில்கள் திறக்கப்பட்டு விட்டன. அதே போல மால்களும் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. அதனால் மால்களில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மால்கள் திறப்பு.. கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை அறிவித்தது தமிழக அரசு!

காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி இருப்பவர்களை மால்களுக்குள் அனுமதிக்க கூடாது எனவும் கண்டிப்பாக எல்லா கடைகளிலும் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும் எனவும் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு கடையை விட்டு செல்லும் போது கைகளை கிருமிநாசினியால் சுத்தப்படுத்திக்க கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல வாடிக்கையாளர்களும் விற்பனையாளர்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் போடப்பட்டுள்ள வட்டங்களுக்குள் தான் நிற்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் தேவை இல்லாமல் ஒரு பொருளை தொட்டால் அந்த பொருளை அவர்கள் தான் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.