துணைநிலை கவர்னர் வாயிலாக டெல்லியை ஆட்சி செய்ய பா.ஜ.க. விரும்புகிறது.. காங்கிரஸ் குற்றச்சாட்டு

துணைநிலை கவர்னர் வாயிலாக டெல்லியை ஆட்சி செய்ய பா.ஜ.க. விரும்புகிறது.. காங்கிரஸ் குற்றச்சாட்டு

துணைநிலை கவர்னர் வாயிலாக டெல்லியை ஆட்சி செய்ய பா.ஜ.க. விரும்புகிறது அதனால்தான் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதாவை நிறைவேற்றியது என்று காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களைவில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா 2021ஐ நிறைவேற்றியது. இந்த மசோதா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை காட்டிலும் துணைநிலை கவர்னருக்கு அதிகாரத்தை அளிக்கிறது. அதாவது டெல்லி சட்டப்பேரவையில் எந்த சட்டங்களை இயற்றினாலும் அதற்கு துணைநிலை கவர்னரின் ஒப்புதல் அவசியம்.

துணைநிலை கவர்னர் வாயிலாக டெல்லியை ஆட்சி செய்ய பா.ஜ.க. விரும்புகிறது.. காங்கிரஸ் குற்றச்சாட்டு
பா.ஜ.க.

மாநிலங்களவையில் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா மீதான விவாதத்தின் போது, காங்கிரசும், ஆம் ஆத்மியும் கடுமையாக எதிர்த்து பேசின. அந்த கட்சிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த பிறகு இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா தொடர்பாக காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.யும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:

துணைநிலை கவர்னர் வாயிலாக டெல்லியை ஆட்சி செய்ய பா.ஜ.க. விரும்புகிறது.. காங்கிரஸ் குற்றச்சாட்டு
காங்கிரஸ்

துணைநிலை கவர்னர் வாயிலாக தேசிய தலைநகரை ஆட்சி செய்ய அவர்கள் விரும்புகிறார்கள், அதனால்தான் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளனர். இனி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசங்காத்துக்கான தேவை என்ன? இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்பும்படி பா.ஜ.க.வை நாங்கள் கட்டாயப்படுத்தினோம். ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான் எதிர்க்கட்சிகள் நேற்றுமுன்தினம் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.