தமிழகத்தில் அதிதீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வீரியம்மிக்க கொரோன வைரஸ் பிரிவு! – அதிர்ச்சித் தகவல்

 

தமிழகத்தில் அதிதீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வீரியம்மிக்க கொரோன வைரஸ் பிரிவு! – அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் அதிதீவிர வகை கொரோனா வைரஸ் கிருமி வேகமாக பரவி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கடந்த ஜனவரி 1ம் தேதி சீனாவில் வூகானில் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பரவ வாய்ப்பே இல்லை என்று தமிழக அரசு தொடக்கத்தில் கூறி வந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா தாக்குதல் அதிகம் உள்ள மாநிலங்கள் வரிசையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் கொரோனா 2 லட்சம் பேருக்கு பரவலாம் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிதீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வீரியம்மிக்க கொரோன வைரஸ் பிரிவு! – அதிர்ச்சித் தகவல்இந்த நிலையில் தமிழகத்தில் பரவும் கொரோனா வைரஸ் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி வருகிறது. கோவிட் 19 வைரசில் ஏ1, ஏ2, ஏ3, பி1, பி2 என்று பல வகைகள் இருப்பதாகவும், எந்த வகையான வைரஸ் என்று கண்டறிந்து, அதற்கு ஏற்ற வகையில் பக்கவிளைவுகள் வராமல் தடுக்க சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் அதிதீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வீரியம்மிக்க கொரோன வைரஸ் பிரிவு! – அதிர்ச்சித் தகவல்தற்போது சிகிச்சைக்கு வரும் பலருக்கும் கிளாட் ஏ1-3 என்ற புதிய வகை வைரஸ் தொற்று இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கொரோனாவில் மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் இந்த ஏ1-3 என்று கூறப்படுகிறது. இதன் வீரியம் மிக அதிகம் என்று கூறுகின்றனர்.மகாராஷ்டிரா, தெலங்கானாவில் முதலில் இந்த வகை கோவிட் 19 பரவல் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது தமிழகத்திலும் பலருக்கு இந்த வகை வைரஸ் இருப்பது அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமாக இந்த அதிக வீரியம் கொண்ட வைரஸ் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கொரோனாவுக்கு தடுப்பூசி இல்லை. நமக்கு வந்தால் அந்த வைரசை அழிக்க மருந்து இல்லை. நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதன் மூலம் கொரோனா வராமல் தடுக்க முடியும். கொரோனா வந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் போன்ற பாதிப்பு வராமல் இருக்கவே சிகிச்சை அளிக்கப்படுகின்றன. எனவே, மற்றவர்களை நம்புவதை விட நம்மை நாமே காத்துக்கொள்வது பாதுகாப்பானது.