ஐநா பொதுச் சபையில் முதல் முறையாக… ஏகோபித்த ஆதரவால் கெத்து காட்டிய மாலத்தீவு!

 

ஐநா பொதுச் சபையில் முதல் முறையாக… ஏகோபித்த ஆதரவால் கெத்து காட்டிய மாலத்தீவு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது தலைவராக மாலத்தீவு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக துருக்கி நாட்டின் வோல்கான் போஸ்கீர் தலைவராக இருந்தார். மாலத்தீவைச் சேர்ந்த ஒருவர் ஒருமுறை கூட இந்தப் பதவியை வகிக்கவில்லை என்பதால் இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகள் அப்துல்லாவிற்கு ஆதரவளித்தன. வாக்கெடுப்பில் அப்துல்லாவிற்கு ஆதரவாக 143 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சலமாய் ரசூலுக்கு 48 வாக்குகளும் கிடைத்தன.

ஐநா பொதுச் சபையில் முதல் முறையாக… ஏகோபித்த ஆதரவால் கெத்து காட்டிய மாலத்தீவு!

ஆண்டுதோறும் சுழற்சி முறை அடிப்படையில் ஐநா சபையின் பொதுக்குழு தலைவர் தேர்வு செய்யப்படுவார். ஒவ்வொரு பிராந்திய அடிப்படையில் சுழற்சி முறையில் இந்த வாய்ப்பு அனைத்து நாட்டவருக்கும் வழங்கப்படும். சுழற்சி முறையில் இந்தாண்டு ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கு வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளிவந்த உடனே மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் தான் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இதுவரை மாலத்தீவு ஒரு முறை கூட இந்தப் பதவியை வகிக்கவில்லை என்பதால் பெருவாரியான நாடுகள் அவருக்கு ஆதரவு அளித்தன.

ஐநா பொதுச் சபையில் முதல் முறையாக… ஏகோபித்த ஆதரவால் கெத்து காட்டிய மாலத்தீவு!

இதற்கு நடுவே ஆறு மாதத்திற்கு முன்பு ஆப்கானிஸ்தான் அமைச்சர் சலமாய் தீடிரென்று தானும் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவருக்கு குறிப்பிட்ட நாடுகள் ஆதரவளித்த போதிலும், முன்கூட்டியே மாலத்தீவு அனைத்து நாட்டு பிரதிநிதிகளிடமும் பேசி வைத்துவிட்டதால் அப்துல்லாவின் கையே ஓங்கியது. அவருக்கு வாக்களிப்பதாக பெரும்பாலான நாடுகள் உறுதியளித்துவிட்டதாலும், 1966ஆம் ஆண்டே ஆப்கானிஸ்தான் ஏற்கெனவே இந்தப் பதவியிலிருந்ததாலும் மாலத்தீவுக்கே பெரும்பான்மை கிடைத்தது.