வெளிநாட்டு சுற்றுலா வாசிகளுக்கு தடையை நீட்டித்தது மலேசிய அரசு

 

வெளிநாட்டு சுற்றுலா வாசிகளுக்கு தடையை நீட்டித்தது மலேசிய அரசு

கொரோனா நோய்த் தொற்றால் பல மாற்றங்களைக் கண்டு வருகிறது உலகம். நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது தவிக்கின்றன நாடுகள். ஓரளவுக் கட்டுக்குள் வைத்திருக்கும் நாடுகளில் மீண்டும் புதிய கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட, திகைக்கின்றன அரசுகள்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 48 லட்சத்து  88 ஆயிரத்து 299 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 19 நாட்களுக்குள் 48 லட்சம் அதிகரித்து விட்டது.  

வெளிநாட்டு சுற்றுலா வாசிகளுக்கு தடையை நீட்டித்தது மலேசிய அரசு

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 72 லட்சத்து 76 ஆயிரத்து 321 நபர்கள்.  8 லட்சத்து 40 ஆயிரத்து 431 பேர் இறந்து விட்டார்கள்.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்து, பதிவு செய்திருக்கிறது. ஆயினும், அது மக்கள் நடைமுறைக்கு வர வில்லை. எனவே, ஒவ்வொரு நாடும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள புதிய விதிமுறைகளை அமல்செய்து வருகின்றன.

வெளிநாட்டு சுற்றுலா வாசிகளுக்கு தடையை நீட்டித்தது மலேசிய அரசு

மலேசியாவில் சுற்றுலா தொடர்பாக முக்கியமான அறிவிப்பை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி மலேசியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர தற்போது தடை உள்ளது. அந்தத் தடையை 2020 ஆண்டின் இறுதிவரை நீட்டித்துள்ளது. அயல்நாட்டு எல்லைகள் மூடப்பட்டிருப்பது தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா வாசிகளுக்கு தடையை நீட்டித்தது மலேசிய அரசு

மலேசியாவில் 9306 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 9030 பேர் குணம் அடைந்துவிட்டனர். 125 பேர் இறந்துவிட்டனர்.

தற்போது புதிய நோயாளிகள் அதிகரித்து வருவதால் மலேசிய அரசு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.