மலேசியா: 14 வயது சிறுவனின் உடல் முதலையின் வயிற்றில் இருந்து கண்டெடுப்பு!

மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஆற்றங்கரையோரம் சிப்பியை சேகரிக்க சென்ற சிறுவனின் உடல் பாகங்கள் முதலையின் வயிற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மலேசியாவின் கூச்சிங் (Kuching) என்ற இடத்தில் ஆற்றங்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை 14 வயது சிறுவன் ரிக்கி சிப்பியை சேகரிக்க சென்றான். அப்போது ஆற்றில் இருந்த 14 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று சிறுவனைக் கடித்து ஆற்றுக்குள் இழுத்தது. இதனால் சிறுவனின் உறவினர்கள் உதவி செய்ய முயன்றனர். உள்ளூர் ஆட்களைக் கூட்டிவந்து சிறுவனைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள்ளாக அது சிறுவனை இழுத்துக்கொண்டு ஆற்றுக்குள் சென்றுவிட்டது.
இதைத் தொடர்ந்து அந்த பயங்கர முதலையை தேடும் வேட்டையில் கிராம மக்களும், அதிகாரிகளும் ஈடுபட்டனர். கோழி இறைச்சியை கட்டி தொங்கவிட்டு முதலைக்காக காத்திருந்தனர். கோழி இறைச்சியை சாப்பிட வந்த முதலையை மக்கள் லாவகமாக பிடித்தனர்.


முதலையை கொன்று அதன் வயிற்றைக் கிழித்து பார்த்தபோது சிறுவன் ரிக்கியின் உடலை மற்றும் எலும்பு மிச்சங்கள் வயிற்றில் இருந்ததை கண்டறிந்தனர். முதலையின் வயிற்றில் கிடைத்த சிறுவனின் உடல் பாகங்களை வைத்து அவனுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது. சிறுவன் ஒருவன் முதலையால் கடித்து கொல்லப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று விவரம் இதோ!

தமிழகத்தில் கொரோனா பரவலால் இதுவரை ஒட்டுமொத்தமாக 2.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றும்...

வழிந்தோடிடும் ரத்தமும் ,கிழிந்து தொங்கிய சதைகளுமாக -பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி வழக்கு -பெண்கள் உரிமை ஆணையம் போலீசுக்கு நோட்டீஸ்..

மேற்கு டெல்லியில் இரண்டு நாட்களுக்கு(ஆகஸ்ட்- 4) முன்பு 12 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றது தொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையம் (டி.சி.டபிள்யூ) வியாழக்கிழமை டெல்லி போலீசாருக்கு...

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை : ஆக.10ல் முதல்வர் அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை...

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30,000கன அடியாக அதிகரிப்பு!

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல், குற்றால அருவிகள் என பல்வேறு நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை...