பிரபல இயக்குநர் ஷாநவாஸ் காலமானார்!

 

பிரபல இயக்குநர் ஷாநவாஸ் காலமானார்!

பிரபல மலையாளப் பட இயக்குநர் ஷாநவாஸ் மூளை சாவு காரணமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

பிரபல இயக்குநர் ஷாநவாஸ் காலமானார்!

பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் ஷாநவாஸ்(40) படத்தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இதை தொடர்ந்து மலையாளத்தில் கரி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதை தொடர்ந்து மலையாள நடிகர் ஜெயசூர்யாவைவைத்து, சூபியும் சுஜாதயும் என்ற பெயரில் படத்தை இவர் இயக்கிய படம் மாபெரும் வெற்றி பெற்றது.

பிரபல இயக்குநர் ஷாநவாஸ் காலமானார்!

இவருக்கு கடந்த சனிக்கிழமை இரவு ஷாநவாஸுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு மூளை சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பிரபல இயக்குநர் ஷாநவாஸ் காலமானார்!

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷாநவாஸ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.