பிரபல மலையாள நடிகர் அனில் முரளி காலமானார்!

 

பிரபல மலையாள நடிகர் அனில் முரளி காலமானார்!

பிரபல நடிகர் அனில் முரளி உடல்நலக்குறைவால் எர்ணாகுளத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 56

பிரபல மலையாள நடிகர் அனில் முரளி காலமானார்!

சின்னத்திரை மூலமாக அறிமுகமான நடிகர் அனில் முரளி ‘கன்னியாகுமரியில் ஒரு கவிதா’ என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தார். மலையாள நடிகரான இவர் தமிழில் நிமிர்ந்து நில், தனி ஒருவன், கணிதன், அப்பா, கொடி, மிஸ்டர் லோக்கல், நாடோடிகள் 2, வால்டர் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகர் அனில் முரளி காலமானார்!

இந்நிலையில் அனில் முரளி கல்லீரல் பிரச்சனையால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுவரை சுமார் 150 ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அனில் முரளிக்கு 2 மகள்கள் உள்ளனர்.