வந்தா நல்லது.. காங்கிரஸுக்கு தூது விடும் மக்கள் நீதி மய்யம்!

 

வந்தா நல்லது.. காங்கிரஸுக்கு தூது விடும் மக்கள் நீதி மய்யம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் களம் அதிரி புதிரியாக மாறியிருக்கிறது. பல கட்சிகள் அதிமுக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் சூழலில் இருக்கின்றன. அதில் ஒன்று காங்கிரஸ். திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்கிறது. கடந்த முறை தேர்தலின் போது, திமுக வழங்கிய 41 இடங்களில் காங்கிரஸ் வெறும் 5 இடங்களிலேயே வெற்றி பெற்றது. இதை கருத்தில் கொண்டு, அதிக தொகுதிகளை கொடுக்க திமுக மறுப்பு தெரிவித்து வருகிறது.

வந்தா நல்லது.. காங்கிரஸுக்கு தூது விடும் மக்கள் நீதி மய்யம்!

அண்மையில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் போது, திமுக குறைவான தொகுதிகளை கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கொதித்தெழுந்த மா.செக்கள், 30க்கும் குறைவான இடங்கள் கொடுத்தால் கூட்டணியை விட்டு வெளியேறலாம் என்று கூறினார்களாம். அதுமட்டுமில்லாமல், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் சிலர் கூறியதாக தெரிய வந்தது.

வந்தா நல்லது.. காங்கிரஸுக்கு தூது விடும் மக்கள் நீதி மய்யம்!

அதிமுக, திமுகவுக்கு எதிராக மூன்றாவது அணியாக களமிறங்கியிருக்கும் மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறி வந்த நிலையில், அதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், காங்கிரஸுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது.

வந்தா நல்லது.. காங்கிரஸுக்கு தூது விடும் மக்கள் நீதி மய்யம்!

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் குமரவேல், மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது. காங்கிரஸுடன் வெவ்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். குமரவேல் சொன்ன இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.